திருத்தணி, : சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று நடந்த கேதார கவுரி நோன்பு விழாவில், திரளான பெண்கள், அதிரசம், வடை, பழங்கள் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தீபாவளிக்கு மறுதினம், சுமங்கலி பெண்கள், கேதார கவுரி நோன்பு அனுஷ்டிப்பது வழக்கம்.அந்த வகையில், நேற்று, தீபாவளி மறுநாள் என்பதால், திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், கவுரி நோன்பு விழா நடந்தது.இதில், உற்சவர் கவுரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பெண் பக்தர்கள், தட்டில், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 அதிரசம், 21 வடை மற்றும் பழங்கள் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
சில பெண்கள், புதிய சேலைகள், வளையல் மற்றும் பூ குங்குமம் வைத்து சுமங்கலி பூஜை நடத்தினர்.காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, பெண்கள் வந்து கவுரி நோன்பு விழாவில் வழிபட்டனர்.இதே போல், திருத்தணியில் உள்ள அம்மன் கோவில்களில், கேதார நோன்பையொட்டி, பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.-மாமல்லபுரம்தீபாவளி பண்டிகையின், மறுநாள் அமாவாசையில், கேதார கவுரி விரத நோன்பு வழிபாடு நடத்தப் படும்.பெண்கள், குடும்ப நலன் உள்ளிட்டவை வேண்டி, இவ்வழிபாடு நடத்துவர். தீபாவளியான, நேற்று முன்தினம், அமாவாசையாகவும் அமைந்தது.இதையடுத்து, மாமல்லபுரத்தில், தொல்லியல் விநாயகர் கோவிலில், சுவாமியை, சந்தனகாப்பில் அலங்கரித்து, நோன்பு விரத பெண்கள், அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களை, சுவாமிக்கு படைத்து, வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE