பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : நவ 16, 2020
Share
Advertisement
குடிசை வீடு தீயில் நாசம்வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, கீழ்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கவேல் பாண்டி, 23. இவரது மனைவி பிரசவத்திற்காக, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது வீடு திடீரென தீயில் எரிந்து நாசமானது. இவர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் தப்பினார்.வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பெண்

குடிசை வீடு தீயில் நாசம்வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, கீழ்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கவேல் பாண்டி, 23. இவரது மனைவி பிரசவத்திற்காக, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது வீடு திடீரென தீயில் எரிந்து நாசமானது. இவர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் தப்பினார்.வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பெண் புகார்: ஒருவர் கைதுவெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி மேகலா, 54. முன்விரோதம் காரணமாக, இதே பகுதியைச் சேர்ந்த பாலையம் மகன் கண்மணி, 55, என்பவர், மேகலாவிடம் தான் அணிந்திருந்த ஆடையை கழற்றி ஆபாசமாக பேசி அழைத்துள்ளார்.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், மேகலா அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த போலீசார், கண்மணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.இளம்பெண் மாயம்வெள்ளவேடு: வயலாநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் மகள் பாரதி, 21. தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், கடந்த, 11ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், பவுன்ராஜ் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வாலிபர் தற்கொலைமப்பேடு: மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் வருண்குமார், 18. இவர், கடந்த 13ம் தேதி, மப்பேடு கூட்டு சாலை அருகில் உள்ள தனியார் கார்டன் அருகே இறந்து கிடப்பதாக, ஷாம் என்பவர், பரசுராமனுக்கு, மொபைல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.இதையடுத்து, மப்பேடு போலீசில், பரசுராமன் அளித்த புகாரையடுத்து, போலீசார்சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, மப்பேடு போலீசில், பரசுராமன் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X