சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் குளித்த மாணவர் மாயம்

Added : நவ 16, 2020
Share
Advertisement
பழவேற்காடு : நண்பர்களுடன், கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லுாரி மாணவர், கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். பெரியபாளையம் அடுத்த, மஞ்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ், 20; பொன்னேரி அரசு கல்லுாரியில், 2ம் ஆண்டு, பி.ஏ., படித்து வந்தார்.தீபாவளியை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை, 4:30 மணிக்கு நண்பர்களுடன், பழவேற்காடு கடற்கரைக்கு வந்தார். நண்பர்களுடன், கடலில்

பழவேற்காடு : நண்பர்களுடன், கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லுாரி மாணவர், கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்.

பெரியபாளையம் அடுத்த, மஞ்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ், 20; பொன்னேரி அரசு கல்லுாரியில், 2ம் ஆண்டு, பி.ஏ., படித்து வந்தார்.தீபாவளியை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை, 4:30 மணிக்கு நண்பர்களுடன், பழவேற்காடு கடற்கரைக்கு வந்தார். நண்பர்களுடன், கடலில் இறங்கி ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். உடன் வந்த நண்பர்கள் அருகில் இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மீனவர்கள் வந்து கடலில் நீந்தியபடி மாயமான கல்லுாரி மாணவரை இரவு வரை தேடினர்.லோகேஷ் கிடைக்காத நிலையில், மீண்டும், நேற்று காலை முதல், தேடும் பணி தொடர்கிறது.கடற்கரையோர கிராமங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X