பொது செய்தி

தமிழ்நாடு

பாலிசிதாரருக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

Added : நவ 16, 2020
Share
Advertisement
சென்னை : மருத்துவ செலவு வழங்காத காப்பீட்டு நிறுவனம், தவணை தொகையுடன் இழப்பீடும் சேர்த்து, 2.60 லட்சம்ரூபாய், வாடிக்கையாளருக்கு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிகிச்சை செலவுதாம்பரம் மேற்கு, வைகை நகரைச் சேர்ந்தவர், ஜான்ராபர்ட், 48. இவர், தனியார் வங்கியில், 50 லட்சம் ரூபாய்க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனத்தில், கடன் பாதுகாப்பு பாலிசி எடுத்து, தவணை தொகை செலுத்தி

சென்னை : மருத்துவ செலவு வழங்காத காப்பீட்டு நிறுவனம், தவணை தொகையுடன் இழப்பீடும் சேர்த்து, 2.60 லட்சம்ரூபாய், வாடிக்கையாளருக்கு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிகிச்சை செலவுதாம்பரம் மேற்கு, வைகை நகரைச் சேர்ந்தவர், ஜான்ராபர்ட், 48. இவர், தனியார் வங்கியில், 50 லட்சம் ரூபாய்க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனத்தில், கடன் பாதுகாப்பு பாலிசி எடுத்து, தவணை தொகை செலுத்தி வந்தார்.உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலுார் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்றார். சிகிச்சை செலவு வழங்க கோரியும், காப்பீடு நிறுவனம் வழங்காததால் பிரச்னை ஏற்பட்டது.

பாலிசி தவணை தொகை, உடல் நல பாதுகாப்புக்கும் சேர்த்தே செலுத்தப்பட்டது. இதனால், தவணை தொகை, 2 லட்சம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், இழப்பீடு, 5 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாலிசி தவணைகடந்த, 2018ல் இருந்து, வழக்கு நடந்து வந்தது.வழக்கு விசாரணையில், 'சேவையில் குறைபாடு இல்லை; வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

இந்த வழக்கில், நீதிபதி மோனி பிறப்பித்த உத்தரவு:காப்பீட்டு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு பாலிசி தவணை தொகை, 2 லட்சம் ரூபாய்காப்பீட்டு நிறுவனம் திரும்ப வழங்குவதுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு, 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 2.60 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X