சென்னை : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, சாலையை அளவீடு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவில், 600க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்கு, 15 ஆண்டு களுக்கு மேலாக சாலை அமைக்கப்படவில்லை. ஊராட்சி தலைவர் ஆஷா கல்விநாதன் மற்றும் வார்டு உறுப்பினர் உமா பிரசாத் எடுத்த முயற்சி காரணமாக, இச்சாலை அமைப்பதற்கு நிதி வழங்க மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம், 5.40 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்.ஆனால், ஆக்கிரமிப்பால், சாலை குறுகியுள்ளது.
இதைக்காரணம் காட்டி, சாலை அமைக்கும் பணியை, புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் துவங்கவில்லை. இதனால், எம்.எல்.ஏ., ஒதுக்கிய நிதி, திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சாலையை அளவிடும் பணியை துவங்கியுள்ளனர். முறையாக ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளனர். இதனால், 15 ஆண்டுகளுக்கு பின் சாலை அமைக்கப்படுவது உறுதியாகியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE