திருவொற்றியூர் : இறைச்சி கடை மூடலால், வடசென்னையில் மீன் சந்தைகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அமாவாசை என்பதால், யாரும் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவில், நாட்டம் செலுத்தவில்லை.மறுநாளான நேற்று, விடுமுறை தினம் என்பதால், இறைச்சியை நோக்கி படையெடுத்த மக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.காரணம், நேற்று, மகாவீர் நிர்மான் தினத்தை முன்னிட்டு, கறிக்கோழி, இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருந்தது. அனைத்து இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால், மக்கள் மீன் சந்தைகளை நோக்கி படையெடுத்தனர். அதன்படி, எண்ணுார், தாழங்குப்பம், விம்கோ நகர், திருவொற்றியூர், சுங்கசாவடி - எம்.ஜி.ஆர்.நகர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் மார்க்கெட்டுகளில், கூட்டம் அலைமோதியது. வடசென்னையின் முக்கிய மீன் சந்தையாக கருதப்படும், காசிமேடு மீன் சந்தையிலும், வழக்கத்திற்கு மாறாக, அசைவ பிரியர்கள் ஆர்ப்பரிப்பால், களைகட்டியது.'சீல் வைப்பு'மகாவீர் நிர்மான் தினத்தை முன்னிட்டு, நேற்று, இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, ஜானகியம்மன் எஸ்டேட் பகுதியில் செயல்பட்ட, கறிக்கோழி கடைக்கு, சுகாதார அலுவலர் அன்பழகன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE