செங்குன்றம் : சாலையை கடக்கும்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர், பஸ்சின் சக்கரத்தில் சிக்கி, பரிதாபமாக பலியானார்.
சென்னை, செங்குன்றம் அடுத்த அலமாதி, எடப்பாளையத்தில் வசித்தவர் ஆனந்த், 25. சற்று மனநலம் குன்றியவர். இவர், நேற்று முன்தினம் மாலை, செங்குன்றம் பஸ் நிலையத்திற்குள் செல்வதற்காக, நுழைவாயில் அருகே நடந்து சென்றார்.அங்கு, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மழைநீர் வடிகால் மீது நடந்து சென்ற ஆனந்த், நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது, நிலையத்தில் இருந்து வெளியேறிய, தடம் எண்: 57 எச் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, தலைநசுங்கி பலியானார். இது குறித்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE