சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்ட நேரத்தில் பட்டாசு வெடித்த 1,000க்கும் மேற்பட்டோர் கைது

Added : நவ 16, 2020
Share
Advertisement
சென்னை : சென்னையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை மீறி, பட்டாசு வெடித்தது தொடர்பாக, போலீசார், 428 வழக்குகள் பதிவு செய்து, 1,000க்கும் மேற்பட்டோரை கைது செய்து, ஜாமினில் விடுவித்துள்ளனர். நாடு முழுதும், தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2018ல், உச்ச நீதிமன்றம், காலை, 6:00 - 700 மாலை, 7:00 - 8:00 என, இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என, அனுமதி

சென்னை : சென்னையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை மீறி, பட்டாசு வெடித்தது தொடர்பாக, போலீசார், 428 வழக்குகள் பதிவு செய்து, 1,000க்கும் மேற்பட்டோரை கைது செய்து, ஜாமினில் விடுவித்துள்ளனர்.

நாடு முழுதும், தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2018ல், உச்ச நீதிமன்றம், காலை, 6:00 - 700 மாலை, 7:00 - 8:00 என, இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என, அனுமதி அளித்தது.தகவல்தமிழகத்திலும், இந்த நேரத்திலும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீறுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் மற்றும், ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என, எச்சரிக்கையும் விடப்பட்டது. இதையடுத்து, பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க, மாநிலம் முழுதும் ரோந்து போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.

அத்துடன், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்போர் பற்றி, அவசர போலீஸ் எண்: 100 மற்றும் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறை, 101க்கு, பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி, சென்னையில், பாரிமுனை மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட, வட சென்னையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக, போலீசார், 37 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.உயிரிழப்பு இல்லை அதேபோல, தி.நகர் மற்றும் பரங்கிமலை உள்ளிட்ட, தெற்கு மண்டலத்தில், 95; ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலத்தில், 57; அண்ணா நகர், அம்பத்துார் உள்ளிட்ட, மேற்கு மண்டலத்தில், 239 என, மொத்தம், 428 வழக்குகளை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, 1,000க்கும் மேற்பட்டோரை கைது செய்து, ஜாமினில் விடுவித்துள்ளனர். பட்டாசு தொடர்பாக கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், போலீசார், 224 வழக்குகள் அதிகம் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து பணியாற்றியதன் விளைவாக, பெரிய விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகள் மிக குறைவு. உயிரிழப்புகள் எதும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X