சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி கொண்டாட்டத்தில் 'குடி'மகன்கள் அட்டகாசம்

Added : நவ 16, 2020
Share
Advertisement
திருவொற்றியூர் : -தீபாவளி கொண்டாட்டத்தின் போது, ஐந்து வெவ்வேறு இடங்களில் மதுபோதையில், 'குடி'மகன்கள் பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எம்.கே.பி., நகர் சென்னை, வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர், ஆகாஷ், 25. இவர், நேற்று முன்தினம் மாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, எஸ்.ஏ., காலனி அருகே, நடந்து சென்றபோது, நான்கு பேர் கும்பல்,

திருவொற்றியூர் : -தீபாவளி கொண்டாட்டத்தின் போது, ஐந்து வெவ்வேறு இடங்களில் மதுபோதையில், 'குடி'மகன்கள் பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எம்.கே.பி., நகர் சென்னை, வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர், ஆகாஷ், 25. இவர், நேற்று முன்தினம் மாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, எஸ்.ஏ., காலனி அருகே, நடந்து சென்றபோது, நான்கு பேர் கும்பல், போதையில் வழிமறித்தனர். ஆகாஷிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.அவர் தர மறுக்கவே, ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கி தப்பினர். படுகாயமடைந்தவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொடுங்கையூர் கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கவுதம், 19. ஐ.டி.ஐ., மாணவர். நேற்று முன்தினம் மதியம், வீட்டருகே, சிவசக்தி நகர் வழியாக, நடந்து சென்றபோது, போதையில் இருந்த நான்கு பேர் வழிமறித்து, பணம் கேட்டு தகராறு செய்தனர். அவரிடம் பணம் இல்லாத ஆத்திரத்தில், பீர் பாட்டிலால் தலையில் பலமாக தாக்கி, அந்த கும்பல் தப்பியது. படுகாயமடைந்த கவுதம், தனியார் மருத்துமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.தலையில், 20 தையல்கள் போடப்பட்டுள்ளன. இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வியாசர்பாடி கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ், 20. நேற்று முன்தினம், வியாசர்பாடி, அசோக் பில்லர் அருகே, தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை போதையில் வழிமறித்த, ஐந்து பேர் கும்பல், சரமாரியாக தாக்கி தப்பினர்.இது குறித்து விசாரிக்கும் வியாசர்பாடி போலீசார், முன்விரோதம் காரணம், இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என, கூறினர்.திருவொற்றியூர் சென்னை, திருவொற்றியூர், அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் சலீம், இவர் வீட்டருகே, நேற்று முன்தினம் மாலை, இரு வாலிபர்கள் மதுபோதையில் கத்தியபடி, சாலையில் இருந்த பொருட்களை அங்கும் இங்குமாய் வீசினர்.

மேலும், கோவிலில் இருந்த அகல் விளக்குகளை துாக்கி வீசியுள்ளனர். இதை, அப்துல்சலீம் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், அவர் மீது கற்களை வாரி எறிந்தனர்.சுதாரித்தவர் விலகினார். கற்கள் அங்கிருந்த கார் கண்ணாடி மீது பட்டு, உடைந்தது.இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், ரகளையில் ஈடுபட்ட எண்ணுாரைச் சேர்ந்த சரத்குமார், 24, செல்வம், 23, ஆகியோரை கைது செய்தனர்.தண்டையார்பேட்டைதிருவொற்றியூரைச் சேர்ந்த, நரேஷ், ஆகாஷ் ஆகிய இருவரும், ராயபுரத்தில் உள்ள நண்பரை பார்க்க, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.தண்டையார்பேட்டை, கணக்கர் தெருவில் இவர்களை, வழிமறித்த மூவர், மொபைல் கேட்டு மிரட்டினர். அவர் மறுக்கவே, கத்தியை எடுத்து நரேஷை தாக்கி, மொபைலை பறித்து தப்பினர்.இது குறித்து விசாரிக்கும் தண்டையார்பேட்டை போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.புளியந்தோப்புபுளியந்தோப்பு, அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண், 20; பூ கட்டும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது, மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்தனர்.குடிபோதையில், அருணை சரமாரியாக கத்தியால் தாக்கி தப்பினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.இது குறித்த புகாரின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X