சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி 2..

Added : நவ 16, 2020
Share
Advertisement
மர்ம நபர்கள் அட்டூழியம்பெரவள்ளூர்: மூலக்கொத்தளம், பி.பி.அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்ஜனி, 20. இவர், நேற்று முன்தினம் நண்பருடன் சேர்ந்து, கொளத்துாரில் உள்ளதியேட்டரில் படம் பார்த்து, வீடு திரும்பினார். பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் சென்ற போது, ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கி தப்பியது. புகாரின் அடிப்படையில், பெரவள்ளூர் போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து

மர்ம நபர்கள் அட்டூழியம்பெரவள்ளூர்: மூலக்கொத்தளம், பி.பி.அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்ஜனி, 20. இவர், நேற்று முன்தினம் நண்பருடன் சேர்ந்து, கொளத்துாரில் உள்ளதியேட்டரில் படம் பார்த்து, வீடு திரும்பினார். பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் சென்ற போது, ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கி தப்பியது. புகாரின் அடிப்படையில், பெரவள்ளூர் போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரிக்கின்றனர்.

கொரட்டூர், அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 22; தனியார் நிதி நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில், பெரவள்ளூர் முத்துகுமாரப்பா சாலையில் பட்டாசு வெடித்தார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர், தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கினர்.இதுகுறித்த புகாரின் அடிப்படையில், பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வியாபாரிக்கு கத்திக்குத்துசெம்பியம்: பெரம்பூர், சோமராமசாமி, 3வது தெருவைச் சேர்ந்தவர் யார்ப் ஜான், 37; பழைய துணி வியாபாரி. இவரது வீட்டிற்குள், நேற்று முன்தினம் இரவு, வாலிபர்கள் சிலர் போதையில் பட்டாசுகளை பற்ற வைத்து வீசியுள்ளனர்.இதில் ஏற்பட்ட தகராறில், யார்ப் ஜானை கத்தியால் வெட்டிய அந்த வாலிபர்கள் தப்பினர். இது குறித்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூவர் மீது தாக்குதல்திரு.வி.க.நகர்: பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சீதா, 45. இவர் உட்பட மூவரை, நேற்று முன்தினம் இரவு, மர்ம கும்பல் வீடு புகுந்து தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து விசாரித்த, திரு.வி.க., போலீசாருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சசி, 41, என்பவர், முன்விரோதத்தில் தாக்கியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.கஞ்சா விற்ற இருவர் கைதுஆவடி: ஆவடி, ஜெ.பி. எஸ்டேட் பகுதியில் கஞ்சா விற்பனை, நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சந்தேக நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 37, என்பதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில்பதாகையைச் சேர்ந்த முரளி, 41, என்பவர் கஞ்சாவை அவருக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த ஆவடி போலீசார், 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தொழில் போட்டி மோதல்மாதவரம்: மாதவரம் பால்பண்ணை அடுத்த பெரிய மாத்துார், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 27. அவர், இறுதி சடங்கு ஊர்வலத்தில் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 47. அவரது தம்பி செந்தில்குமார், 40. அவர்களும், அதே தொழில் செய்து வந்தனர்.அவர்கள், நேற்று முன்தினம், மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே, தொழில் போட்டி காரணமாக, மோதல் ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினரும் அடித்துக்கொண்டனர். இது குறித்து விசாரித்த, மாதவரம் பால்பண்ணை போலீசார், நேற்று காலை, மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X