பொது செய்தி

தமிழ்நாடு

கிண்டி பூங்காவில் கிருமி நாசினி மேடை உண்டு

Added : நவ 16, 2020
Share
Advertisement
சென்னை : வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, கிண்டி சிறுவர் பூங்காவில், கிருமி நாசினி மேடை அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு ஊரடங்கால், கிண்டி சிறுவர் பூங்கா, மார்ச், 17 முதல் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வால், அரசு அறிவித்த வழிகாட்டுதல்படி, கடந்த, 11ம் தேதி திறக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு, முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே

சென்னை : வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, கிண்டி சிறுவர் பூங்காவில், கிருமி நாசினி மேடை அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு ஊரடங்கால், கிண்டி சிறுவர் பூங்கா, மார்ச், 17 முதல் மூடப்பட்டது.

ஊரடங்கு தளர்வால், அரசு அறிவித்த வழிகாட்டுதல்படி, கடந்த, 11ம் தேதி திறக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு, முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், வன உயிரினங்களுக்கு தொற்று பரவாமல் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, வாகனங்களின் சக்கரத்தில் வைரஸ் ஒட்டி இருந்தால், அவை, வன உயிரினங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

இதனால், சிறுவர் பூங்கா செல்லும், அனைத்து வாகனங்களின் சக்கரத்தை சுத்தம் செய்யும் வகையில், கிருமி நாசினி மேடை அமைக்கப்பட்டுள்ளது.மேடையில் தொட்டி கட்டி, அதில் திரவ கிருமி நாசினி கொட்டப்பட்டுள்ளது. நுழைவுவாயில் வழியாக செல்லும் வாகனங்கள், கிருமி நாசினி மேடையில் ஏறி செல்ல வேண்டும்.சக்கரத்தில் வைரஸ் ஒட்டி இருந்தால், அதை கிருமி நாசினி அழித்துவிடும். இதன்மூலம், வன உயிரினங்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X