சென்னை : வன ஊர்வனங்கள் மீதுள்ள அச்சத்தை போக்க, கிண்டி, பாம்பு பண்ணையில், ஓணான் அருகில் சென்று பார்த்து, போட்டோ எடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட தனிக்கூண்டு, நேற்று திறக்கப்பட்டது.
கிண்டி, பாம்பு பண்ணையில், பாம்பு, முதலை, ஆமை, பல்லி என, 39 வகைகளில், 400க்கும் மேற்பட்ட வன ஊர்வனங்கள் உள்ளன. இங்குள்ள, ஊர்வனங்கள் கண்ணாடி கூண்டுக்குள் இருக்கும்.திட்டம்பார்வையாளர்கள், கண்ணாடிக்கு வெளியே நின்று, தொடாமல் பார்க்க வேண்டும். தென் அமெரிக்காவில் உள்ள, 'இகுவானா' என்ற, ஓணான் வகைகள், ஐந்து எண்ணிக்கையில் உள்ளன.இவைகளை, அருகில் சென்று பார்க்கும் வகையில், தனிக்கூண்டு அமைக்கப்பட்டு உள்ளன.
இதன், திறப்பு விழா, நேற்று நடந்தது.இவ்விழாவில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம், மதுரா டிராவல்ஸ் நிறுவனர் வி.கே.டி.பாலன், பாம்பு பண்ணை தலைவர் பால்ராஜ், இயக்குனர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவர்கள், வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்தும், பாம்பு பண்ணைக்கு பொதுமக்கள் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில், சுற்றுலா நிறுவனங்களுடன் சேர்ந்து, தயாரிக்கப்பட்ட திட்டம் குறித்தும் பேசினர்.பாம்பு பண்ணை இயக்குனர் ராஜரத்தினம் கூறியதாவது:பொதுவாக, கண்ணாடிக்கு வெளியே நின்று தான், உயிரினங்களை பார்க்க முடியும்.
தனிக் கூண்டுமுதல் முறையாக, கண்ணாடி கூண்டுக்குள் சென்று, ஓணான், ஆமை அருகில் நின்று பார்க்கும் வகையில், தனிக்கூண்டு அமைத்துள்ளோம். ஓணானுக்கு நாங்கள் வழங்கும் உணவை, பார்வையாளர்கள் ஊட்டி கொடுக்கலாம். அருகில் நின்று போட்டோ எடுத்து கொள்ளலாம்.வன ஊர்வனங்கள் மீதுள்ள அச்சத்தை போக்க, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஓணான், வாலால் தாக்கும் தன்மை உள்ளதால், தொட்டு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என, வலியுறுத்தி உள்ளோம். அருகில் சென்று பார்க்க, 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்கள், கண்ணாடிக்கு வெளியே நின்று பார்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE