சம்பவம் செய்தி

தமிழ்நாடு

9 குடிசைகள் தீக்கிரை

Added : நவ 16, 2020
Share
Advertisement
சென்னை : சென்னையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து ஏற்பட்டு, ஒன்பது குடிசைகள் தீக்கிரையாயின.மதுரவாயல், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நெல்சன், 48. இவர், அவரது வீட்டின் மொட்டை மாடியிலும், அருகேயும், ஆறு குடிசை வீடுகள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியில் அனைவரும் பட்டாசு வெடித்து

சென்னை : சென்னையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து ஏற்பட்டு, ஒன்பது குடிசைகள் தீக்கிரையாயின.மதுரவாயல், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நெல்சன், 48. இவர், அவரது வீட்டின் மொட்டை மாடியிலும், அருகேயும், ஆறு குடிசை வீடுகள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியில் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இதில், பட்டாசு தீப்பொறி குடிசை வீட்டின் மீது விழுந்ததில், பற்றி எரிந்தது. காற்று வேகம் காரணமாக, அடுத்தடுத்த குடிசைகளிலும் தீ பற்றிக்கொண்டது. சம்பவம் அறிந்துவந்த, ஜெ.ஜெ.நகர், மதுரவாயல் தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ஆறு குடிசை வீடுகள் தீக்கிரையாயின. முகலிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மேலே அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில், பட்டாசு தீப்பொறி விழுந்து, முற்றிலும் தீயில் எரிந்து நாசமாயின. சம்பவம் குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

உரிய நேரத்தில், வீட்டிலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.திரு.வி.க நகர், மதுரை சாமி மடம் பிரதான தெருவைச் சேர்ந்த ஆனந்தன். இவரது வீட்டின் மாடியில், மூன்று குடிசை வீடுகள் உள்ளன.நேற்று முன்தினம், புஸ்வானம் வெடித்ததில் தீப்பொறி, அந்த குடிசை வீடுகள் மீது விழுந்தது. இதில், மூன்று வீடுகளிலும் தீப்பிடித்தது. தகவல் அறிந்து, செம்பியம், வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இது குறித்து திரு.வி.க. நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X