கூடலுார்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தாலும் 'இ பாஸ்' கட்டாயம் கொண்டு வர வேண்டும் என குமுளி போலீசார் அறிவித்துள்ளனர்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை ஆயிரம் பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 2 ஆயிரம், முக்கிய பூஜை நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகரஜோதி விழா வரைக்கும் இதற்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.

இவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்கள் முன்பதிவுக்கான சான்று, கொரோனா பரிசோதனை முடிவுக்கான சான்று அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 'இ பாஸ்' இல்லாமல் குமுளி வழியாக செல்ல முயன்ற ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்தாலும் 'இ பாஸ்' கட்டாயம் கொண்டு வர வேண்டும் என குமுளியில் உள்ள கேரள போலீசார் அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE