பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாண மண்டலம் வாரியாக அதிகாரிகள் குழு அமைப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
சேலம்: போக்குவரத்து தொழிலாளரின் கோரிக்கை, பிரச்னைக்கு தீர்வு காண, மண்டலம் வாரியாக, அதிகாரிகள் குழு அமைக்கப்படுகிறது.அரசு போக்குவரத்துக்கழகத்தில், எட்டு கோட்டம், 21 மண்டலங்களில், பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.40 லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். இவர்களின் நலன் காக்க, 18க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள், தங்கள் தனிப்பட்ட பிரச்னை,

சேலம்: போக்குவரத்து தொழிலாளரின் கோரிக்கை, பிரச்னைக்கு தீர்வு காண, மண்டலம் வாரியாக, அதிகாரிகள் குழு அமைக்கப்படுகிறது.


அரசு போக்குவரத்துக்கழகத்தில், எட்டு கோட்டம், 21 மண்டலங்களில், பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.40 லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். இவர்களின் நலன் காக்க, 18க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள், தங்கள் தனிப்பட்ட பிரச்னை, கோரிக்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்டவற்றுக்கு, தொழிற்சங்க நிர்வாகிகளையே நாடுகின்றனர். இதனால், தொழிலாளர், அதிகாரிகள் இடையேயான நட்புறவு, தொடர்பில், இடைவெளி ஏற்படுகிறது. இதை குறைக்க, தொழிலாளர், அதிகாரிகள் இடையே நட்புறவை அதிகரிக்க, தற்போது மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து, நெல்லை கோட்ட மேலாண் இயக்குனர், தொழிலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நெல்லை கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், துணை மேலாளர் நியமனம், வணிகம், தொழில்நுட்ப உதவி மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், மூன்று மாதத்துக்கு ஒருமுறை, காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை தொழிலாளர்களிடம் இருந்து மனுக்கள் பெறுவர். அதன் மீது, போக்குவரத்து விதிக்குட்பட்டு தீர்வு காணப்படும். அதனால், தொழிலாளர் குறைதீர் குழுவில், மனு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பிற, 20 மண்டலங்களில் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X