பொது செய்தி

தமிழ்நாடு

4 திசையிலும் பஞ்சமுகத்துடன் சோமநாதர் காட்சி

Added : நவ 16, 2020
Share
Advertisement
வீரபாண்டி: நான்கு திசையிலும், சேலம் சோமநாதர் பஞ்சமுகத்துடன் காட்சியளிக்கிறார். தமிழகத்தில், மதுரைக்கு அடுத்து, சவுராஷ்டிரர்கள், சேலத்தில் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களால், 100 ஆண்டுக்கு முன், சேலம், அம்மாபேட்டை, நாமமலையில், சிறு லிங்க வடிவில் சோமநாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டனர். 2006ல், ஓட்டுக்கூரையில் இருந்த, அக்கோவிலை இடித்துவிட்டு, குஜராத்தில் உள்ள சோமநாதர்

வீரபாண்டி: நான்கு திசையிலும், சேலம் சோமநாதர் பஞ்சமுகத்துடன் காட்சியளிக்கிறார். தமிழகத்தில், மதுரைக்கு அடுத்து, சவுராஷ்டிரர்கள், சேலத்தில் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களால், 100 ஆண்டுக்கு முன், சேலம், அம்மாபேட்டை, நாமமலையில், சிறு லிங்க வடிவில் சோமநாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டனர். 2006ல், ஓட்டுக்கூரையில் இருந்த, அக்கோவிலை இடித்துவிட்டு, குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தை போன்றே, வடமாநில பாணியில், கோபுரத்துடன், புது சோமநாதர் கோவில் கட்டி, சிறு சிவலிங்கத்துக்கு பதில், பஞ்சமுகங்களுடன், பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, கும்பாபி ?ஷகம் நடத்தினர். குறிப்பாக, பஞ்சமுக சிவலிங்கம் உள்ள கோவில்கள் மிகக்குறைவு. அதிலும், இக்கோவிலில் உள்ளதை போன்று, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என, நான்கு திசைகளிலும், முழு உருவம் வடிக்கப்பட்ட சிவலிங்கம், இங்கு மட்டும் உள்ளது தனிச்சிறப்பு. கோவிலை விரிவுபடுத்தி, கவுரி அம்மன், கால பைரவருக்கு, தனி சன்னதிகள் அமைத்து, கடந்த பிப்., 7ல், கும்பாபி?ஷகம் நடத்தினர். இங்கு, பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபி?ஷகம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபி ?ஷகம், தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு பூஜை, பவுர்ணமியில் கவுரி அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X