பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளியில் ஆப்ரிக்கன் மாவு பூச்சி தாக்குதல் அதிகரிப்பு: முதல்முறை 'ட்ரோன்' மூலம் விவசாயிகள் மருந்து தெளிப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
ஆத்தூர்: மரவள்ளி கிழங்கு செடிகளில், ஆப்ரிக்கன் மாவு பூச்சி தாக்கம் அதிகரித்து வருவதால், முதல்முறை, 'ட்ரோன்' மூலம், விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கிணற்று பாசனம், மானாவாரி நிலங்களில் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதம்

ஆத்தூர்: மரவள்ளி கிழங்கு செடிகளில், ஆப்ரிக்கன் மாவு பூச்சி தாக்கம் அதிகரித்து வருவதால், முதல்முறை, 'ட்ரோன்' மூலம், விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கிணற்று பாசனம், மானாவாரி நிலங்களில் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதம் நடவு செய்யப்படும் மரவள்ளி கிழங்கு செடிகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மூலம், மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு கிடைக்கும். அறுவடை செய்யும் மரவள்ளி கிழங்கு, ஆத்தூரில் உள்ள சேகோ ஆலைகளில் அரவை செய்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி செய்யப்படுகிறது. எட்டு மாதமான இப்பயிரில் 'ஆப்ரிக்கன் மாவு பூச்சி' தாக்கத்தால், செடிகளின் குருத்து இலைகள் சுருண்டு காணப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், மரவள்ளி கிழங்கு செடிகளில் இவ்வகை மாவு பூச்சிகள் தாக்குதல் அதிகளவில் உள்ளதால், கிழங்கு பருவம் அடையும் நிலையில், மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஜி.பி.எஸ்., கருவி மூலம், விவசாய நிலங்களின் எல்லைகள் அளந்து, அதற்குட்பட்ட பகுதியில் உள்ள மரவள்ளி செடிகளின் மீது, மருந்து தெளிக்கும் பணியில், ஆத்தூர் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, முட்டல் விவசாயி ராஜ் கூறியதாவது: நடப்பாண்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில், 3,112 ?ஹக்டேரில் புதிய இன மாவுப்பூச்சியின் தாக்குதல் கண்டறிந்துள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பூச்சி, மரவள்ளிப்பயிரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சாற்றை உறிஞ்சுவதால், நுனிக்குருத்துகள் உருமாறி, வளர்ச்சி குன்றிவிடும். நுனியிலுள்ள இலைகள் ஒன்றாக இணைந்து, முடிக்கொத்தாக தோற்றமளிக்கும். இதனால், கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கும் சூழல் உள்ளது. செடி உயரமாக உள்ளதால், கை தெளிப்பானில் மருந்து தெளிக்க முடியாது என்பதால், 'ட்ரோன்' மூலம், முதல்முறையாக பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. 12 லிட்டர் டேங்க் பொருத்தப்பட்ட, 'ட்ரோன்' மூலம், ஒரு ஏக்கருக்கு, மூன்று டேங்க் வரை தெளிக்கப்படும். ஏக்கருக்கு, 800 ரூபாய் மட்டும் செலவு என்பதோடு, பூச்சி தாக்கத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

'ஒட்டுண்ணி இறக்குமதிக்கு திட்டம்': இதுகுறித்து, ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி நிலைய அலுவலர் வெங்கடாஜலம் கூறியதாவது: ஆப்ரிக்கா, தாய்லாந்தில் அதிக பாதிப்பு ஏற்படுத்திய இப்பூச்சியின் தாக்கம், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் காணப்படுகிறது. தோட்டக்கலை, ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து, புரோபினோபாஸ் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில், 2 மி.லி., மருந்து தெளித்து, 15 நாளுக்கு பின், தயோமீதாக்சேம் லிட்டருக்கு, 0.5 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். ?ஹக்டேருக்கு, 1,750 ரூபாய் வீதம், பயிர் பாதுகாப்பு பணி மேற்கொள்ள, 54.46 லட்சம் ரூபாய் நிதியை, தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார். பப்பாளி மாவு பூச்சிக்கு ஒட்டுண்ணி இருந்ததால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்ரிக்கன் மாவு பூச்சிக்கு ஒட்டுண்ணி இல்லாததால், ஆப்ரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தவிர, வயல்வெளி ஆய்வு செய்து, இவ்வகை மாவு பூச்சியை கொண்டு, தமிழக வேளாண் பல்கலை, பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியியல் ஒட்டுண்ணி ஆய்வு மையத்தில், புதிய ஒட்டுண்ணி உற்பத்தி குறித்து ஆய்வு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X