பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சி, குள்ளப்பநாயக்கனூர், சந்தைப்பேட்டை பஸ் ஸ்டாப்பில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ரேஷன் கடை, துணை சுகாதார நிலையம், அங்கன்வாடிமையம் மட்டுமின்றி, ஓட்டல், மளிகை உள்ளிட்ட தனியார் கடைகள் உள்ளன. அங்கு, தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால், சந்தைப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை, சிறுநீர் கழிக்குமிடம் பராமரிப்பின்றி உள்ளது. ஓராண்டாக, கழிப்பறையின் இரு கதவுகள் உடைந்து, திறந்து கிடப்பதால், மக்கள் பயன்படுத்த முடியவில்லை. தண்ணீர் வசதியும் இல்லை. ஆண்கள் திறந்த வெளியில், இயற்கை உபாதையை கழிப்பதால், அசுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் அவசரத்துக்கு ஒதுங்க இடமின்றி சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பறையை சீரமைக்க, ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE