ஈரோடு: வனத்துக்கு, வனப்பு கூட்டி வரும் பட்டாம் பூச்சிகளின் பட்டியல், ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
ரோஜா அழகி, நீல அழகி, மயில் அழகி, சாக்லேட் வசீகரன், வெள்ளை புள்ளி கருப்பன். என்னடா இது எல்லாம் அதிசயமான பெயர்களாக உள்ளனவே; யார் இவர்கள் என்று அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வர் தூண்டும். அது உண்மைதான். இப்பெயர்களை கொண்டவர்கள் நம் ஈரோடு வனத்தில், வனத்தை வனப்பூட்டி வரும் பட்டாம் பூச்சி இனங்களின் பெயர்கள்தான். ஈரோடு மாவட்ட வனத்துறை, மாதக்கணக்கில் காத்திருந்து, தேடித்தேடி அரிய வகையான பட்டாம் பூச்சிகளை படம் பிடித்து, நம் கண்முன் பதிவு செய்துள்ளது. 2020 வன விலங்கு வாரவிழா கொண்டாட்டத்தின் போது, ஈரோடு வனக்கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அழகிய தமிழ் பெயர்களை கொண்ட பட்டாம் பூச்சிகள், மனதை மயக்கும் வண்ணங்களில், 30 பட்டாம் பூச்சிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவை, ரோஜாஅழகி, சிவப்புஉடல் அழகி, நீலஅழகி, மயில்அழகி, மஞ்சள் புல்வெளியாள், கொண்ணை வெள்ளையன், மஞ்சள் அழகி, வெந்தயவரியன், கருநீலவரியன், வெள்ளைப்புள்ளி கருப்பன், சாக்லேட் வசீகரன், பசலை சிறகன், சூரிய ஒளியன், புங்க நீலன், கரும்புள்ளி நீலன், பழுப்பு புல் நீலன் குறு நீலன், புதிர் நீலன், துத்தி தாவி, நரைச்சிறகு தாவி, கருஞ்சிவப்பு தாவி, மூங்கில் தாவி. இந்த அரிய வகை பட்டாம் பூச்சிகளை காண, ஆர்வம் இருந்தால் வனப்பகுதிக்கு சென்றால் காணலாம். அதற்கு பொறுமையும், நேரமும் வேண்டும். அப்படி வாய்ப்பு கிடைக்க பெறாதவர்கள், ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள, மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு சென்றால் பார்க்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE