பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு அரசு அருங்காட்சியகத்துக்கு இலவச தச்சு வேலை செய்யும் தச்சர்

Added : நவ 16, 2020
Share
Advertisement
ஈரோடு: பணியில் இருந்தால், பசி தெரியாது என, அரசு அருங்காட்சியகத்துக்கு, இலவசமாக தச்சு பணி செய்து கொடுக்கும் தச்சர் கூறுகிறார்.பிறருக்கு உதவ வேண்டும் என, நினைப்பவர்களில் வசதி உள்ளவர்கள் பணம், பொருள், உணவு உள்ளிட்டவைகளை கொடுத்து உதவி செய்வர். பணம், பொருள் வசதியில்லாதவர்கள், தன் உழைப்பை கொடுத்து உதவி செய்வர். அதற்கு உதாரணமாக பலர் உள்ளனர். அதில், ஈரோடு மாவட்டம், பவானி அருகே,

ஈரோடு: பணியில் இருந்தால், பசி தெரியாது என, அரசு அருங்காட்சியகத்துக்கு, இலவசமாக தச்சு பணி செய்து கொடுக்கும் தச்சர் கூறுகிறார்.


பிறருக்கு உதவ வேண்டும் என, நினைப்பவர்களில் வசதி உள்ளவர்கள் பணம், பொருள், உணவு உள்ளிட்டவைகளை கொடுத்து உதவி செய்வர். பணம், பொருள் வசதியில்லாதவர்கள், தன் உழைப்பை கொடுத்து உதவி செய்வர். அதற்கு உதாரணமாக பலர் உள்ளனர். அதில், ஈரோடு மாவட்டம், பவானி அருகே, மைலம்பாடியை சேர்ந்த, சேகர், 50, என்பவர் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தின் தச்சு பணியை, இரண்டு ஆண்டுகளாக கட்டணம் வாங்காமல் செய்து கொடுத்து வருகிறார். இவர், பரம்பரையாக தச்சு தொழில் செய்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர். கலை ஆர்வம் கொண்ட இவர், பணி காரணமாக அடிக்கடி ஈரோடு வரும்போது, அரசு அருங்காட்சியகத்தை ஒரு முறை பார்த்துள்ளார். அங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ள, பல்வேறு வகையான பொருட்களை பார்த்து ஆச்சரியப்பட்டு, தன் கையால் மரச்சங்கிலி ஒன்றை செய்து, அருங்காட்சியகத்துக்கு பரிசாக வழங்கினார். அது முதல், அருங்காட்சியக காப்பாட்சியருக்கு அறிமுகமானார். அருங்காட்சியத்துக்கு தேவையான சிறிய தச்சு வேலைகளை, இலவசமாக செய்து தருகிறார்.

இது குறித்து, சேகர் கூறியதாவது: என் தாத்தா, தந்தையை தொடர்ந்து, நான் தச்சு வேலையை செய்து வருகிறேன். இப்பணியில், நம்மால் முடிந்த உதவியை யாருக்காவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அதன்படி, அருங்காட்சியகத்தில் தச்சு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மரப்பொருட்கள் பழுது ஏற்படும் போது, காப்பாட்சியர் கூப்பிடுவார்; உடனே நான் வந்து சரி செய்து கொடுத்து செல்வேன், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இப்பணியை செய்து வருகிறேன். கட்டணம் வாங்கியது இல்லை. பணியில் ஈடுபடும் போது, பசி எடுத்தால் கூட தெரியாது. கோவில் சிற்பங்களில் உள்ள கல் சங்கிலியை பார்த்து, மரச்சங்கிலி உருவாக்கி வழங்கியுள்ளேன், விசைத்தறி உதிரிபாங்கள் தயாரிக்க, மரத்தினால் 'டை' செய்து கொடுத்து வருகிறேன். நான் படித்தது இல்லை. வருங்கால இளைஞர்கள் படிப்புடன், கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். இன்று தச்சு வேலைக்கு, அரிதாகவே ஆட்கள் கிடைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது: அருங்காட்சியகத்தில் உள்ள அழகிய பொருட்களை பார்த்து, அதிசயத்த சேகர், மரச்சங்கிலி இரண்டை செய்து இலவசமாக கொடுத்துள்ளார். அன்று முதல், அருங்காட்சியத்தின் அனைத்து தச்சு வேலைகளையும் இலவசமாக செய்து வருகிறார். தினமும், 1,000 ரூபாய் கூலி கேட்கும் இந்த காலத்தில், அரசு அருங்காட்சியகத்துக்கு இலவசமாக பணி செய்து கொடுக்கும் இவரை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X