பொது செய்தி

தமிழ்நாடு

ஆதி திராவிட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்

Added : நவ 16, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தாட்கோ மூலம் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என, கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், நான்கு பயிற்சி நிறுவனங்களுக்கு, திறன்மேம்பாட்டு பயிற்சிகள் நடத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கடமை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தாட்கோ மூலம் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என, கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், நான்கு பயிற்சி நிறுவனங்களுக்கு, திறன்மேம்பாட்டு பயிற்சிகள் நடத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கடமை உதவியாளர் பயிற்சிகள், தர்மபுரி நெடுமாறன் நகர் எம்.ஜி.ஆர்., தொழிற்பயிற்சி நிறுவனம், பாப்பிரெட்டிபட்டி மகேஸ்வரா கல்வி அறக்கட்டளை ஆகியவற்றில் வழங்கப்பட உள்ளது. இவற்றில் சேர, 96557 46631 மற்றும், 96005 35130 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தர்மபுரி வாசுக்கவுண்டர் தெரு, லா ஏஞ்சல்ஸ் அழகு பராமரிப்பு நிலையத்தில், அழகுக்கலை சிகிச்சையாளர் பயிற்சி பெற, 94430 27878 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இதேபோல், மருந்தியல் உதவியாளர் பயிற்சி, வெண்ணாம்பட்டி ஆசிரியர் காலனி வெங்கடேஷ்வரா கல்வி அறக்கட்டளையில் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி நிறுவனங்களை, ஆதி திராவிடர் பழங்குடியின மாணவ, மாணவியர் தொடர்பு கொண்டு, இலவச பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு சென்று வர பயணப்படி, போக்குவரத்து செலவு வழங்கப்படும். முடிவில், பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், தாட்கோ மேலாளரிடம் தாங்கள் பெற்ற, பயிற்சி ஏதுவாக தொழில் துவங்க, தொழில் முனைவோர் திட்டத்தில் பயன்பெறலாம். இலவச மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கவும் ஆவன செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X