கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குட்கா பொருட்கள் விற்பனை செய்த, 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி, ஓசூர் டவுன் போலீசார் எம்.ஜி.ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வரும் முகமதுபஷீர்இக்பால், 27 என்பவரை கைது செய்தனர். மேலும், சிப்காட்டில் குந்தன், 25; பாகலூரில் ?கோட்டை மணி, 20; மத்திகிரியில் பார்த்தீபன், 26 ஆகியோரை அப்பகுதி போலீசார் கைது செய்தனர். பாரூரில், வாடமங்கலம் ராஜா, 67; நாகரசம்பட்டியில் ஐகுந்தம் கூட்ரோடு பகுதி கோவிந்தன், 38; தேன்கனிக்கோட்டையில் கீழ்கோட்டை நந்தா, 52; ஊத்தங்கரையில் வெங்கடாஜலம், 47; மத்தூரில் செல்வராஜ், 45; ராஜேந்திரன், 51 என, 10 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE