பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சொந்த தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம், 10 பஞ்சாயத்துகளில், ஐந்து பயனாளிகள் வீதம், 50 பயனாளிகளில் முதல் கட்டமாக, 25

கிருஷ்ணகிரி: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சொந்த தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம், 10 பஞ்சாயத்துகளில், ஐந்து பயனாளிகள் வீதம், 50 பயனாளிகளில் முதல் கட்டமாக, 25 பயனாளிகளுக்கு மட்டும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி பஞ்சாயத்தில், 3, பர்கூர் -3, காவேரிப்பட்டணம்- 2, ஊத்தங்கரை- 3, வேப்பனஹள்ளி- 2, மத்தூர்- 2, ஓசூர்- 3, சூளகிரி- 3, கெலமங்கலம்- 2, தளி- 2 பயனாளிகள் என மொத்தம், 25 பயனாளிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு, கோழி வளர்ப்பில் அனுபவம் அல்லது ஆர்வமுள்ள பயனாளிகளாகவும், 2,500 சதுர அடி பரப்பளவுக்கு குறையாமல், சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தீவன தொட்டிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் பயனாளிகளே வாங்கி கொள்ள வேண்டும். பயனாளிகள் அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீத பயனாளிகள் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்களாக இருக்க வேண்டும். மானியம் அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். எனவே பயனாளிகள், அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X