பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடு நடந்தால் உர விற்பனை உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

Added : நவ 16, 2020
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உர விற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், சிறுதானியம், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உர விற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.


இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், சிறுதானியம், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்களுக்கு தேவையான உரங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு, உர விற்பனை செய்வது அல்லது ஒரு நபருக்கு அதிகளவில் உரங்களை விற்பது மற்றும் உர விலை குறித்து, விபர பலகை வைக்காமல் விற்பனை செய்வது; பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது; விவசாயிகளுக்கு ரசீது கொடுக்க மறுப்பது உள்ளிட்ட தவறுகளில் உர விற்பனையாளர்கள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மானிய விலையில் வழங்கும் உரங்களை, விவசாயிகளுக்கு மட்டுமே, ஆதார் அட்டை எண் பெற்று, சாகுபடி நிலப்பரப்பு மற்றும் பயிர்களுக்கு ஏற்ப வழங்க வேண்டும். உரக்கடை வேலையாட்கள், குடும்ப உறுப்பினர்கள், நிலமற்றவர்கள் மற்றும் தகுதியற்ற நபர்களுக்கு, ஆதார் அட்டை எண் கொண்டு பட்டியலிட்டது தெரிந்தால், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து உர விற்பனையாளர்களும், அரசு நிர்ணயம் செய்துள்ள, அதிகபட்ச விலைக்கு மிகாமல், உர விற்பனை செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், உரம் தொடர்பான புகார்களை, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X