பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த யானைகள்; தேன்கனிக்கோட்டை பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

Added : நவ 16, 2020
Share
Advertisement
ஓசூர்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து, ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு, 30 யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில், தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு, 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்வது வழக்கம். ஜவளகிரியில்

ஓசூர்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து, ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு, 30 யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில், தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு, 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்வது வழக்கம். ஜவளகிரியில் இருந்து, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனச்சரக பகுதி வழியாக, சூளகிரி வனப்பகுதி வரை செல்லும் யானைகள், விவசாய பயிர்களை நாசம் செய்வதும், பொதுமக்களை தாக்குவதும் தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தமிழக வனப்பகுதியான ஜவளகிரிக்கு, கடந்த மாதம், 100க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. இதற்கிடையில், ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட யானைகள் தனியாக பிரிந்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு தற்போது இடம் பெயர்ந்துள்ளன. இதில், 20 யானைகள் நொகனூர், ஆலஹள்ளி வனப்பகுதியிலும், 10 யானைகள் சூரப்பன் குட்டை, வட்டவடிவு பாறை காப்புக்காட்டிலும் முகாமிட்டுள்ளன. இவை, ஓசூர் வனச்சரக பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், நொகனூர், ஆலஹள்ளி, ஜார்கலட்டி, திம்மசந்திரம், மேக்கலகவுண்டனூர் சுற்று வட்டார கிராம மக்கள், வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு சேகரிக்கவோ செல்ல வேண்டாம். இரவு நேரத்தில், விவசாயிகள் நிலத்திற்கு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X