கிருஷ்ணகிரி: கறிநாளை முன்னிட்டு நேற்று, கிருஷ்ணகிரி நகரிலுள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் குவிந்தனர். தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அன்றே அமாவாசை என்பதால், அதிரசம் படைத்து, கேதார கவுரி விரத நோன்பை மக்கள் கடைப்பிடித்தனர். நேற்று கறிநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதுப்பேட்டை, சேலம் சாலை, பழைய பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் இறைச்சி வாங்க மக்கள் குவிந்தனர். நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ராயக்கோட்டை சாலை மற்றும் பழையபேட்டையில் உள்ள மீன் கடைகளில், பல்வேறு ரக மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், பழையபேட்டை மீன் மார்க்கெட்டில் நேற்று காலை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பகல், 12:00 மணிக்கு மேல் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE