பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் குழந்தைகளுக்கான போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
திருச்சி: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில், திருச்சி திருவெறும்பூரில், குழந்தைகளுக்கான பிரத்யேக போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆனந்த், குழந்தைகளுக்கான போலீஸ் ஸ்டேஷனை, திறந்து வைத்தார். டாக்டர் ஆனந்த் கூறியதாவது:

திருச்சி: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில், திருச்சி திருவெறும்பூரில், குழந்தைகளுக்கான பிரத்யேக போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.


திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆனந்த், குழந்தைகளுக்கான போலீஸ் ஸ்டேஷனை, திறந்து வைத்தார். டாக்டர் ஆனந்த் கூறியதாவது: குழந்தைகளின் மனநிலையை கண்டறிவதும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பதும் சவாலானது. சர்வதேச நீதி மையம் கூட, இதுபோன்ற போலீஸ் ஸ்டேஷனை அமைக்க முடியாத நிலையில், திருச்சியில், குழந்தைகளுக்கான போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது. நாடு முழுதும், 11 இடங்களில், இந்த மாதிரியான போலீஸ் ஸ்டேஷன்கள் துவங்கப்பட்டு உள்ளன. கொரோனா காலத்தில், குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க, 'சம் யோஜனா' என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், அனைத்து மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 1800 121 1283 என்ற, எண்ணை தொடர்பு கொண்டு, குற்றச் சம்பவம் தொடர்பாக, வீட்டிலிருந்தே பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு அழைக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவம், தொடர்பாக தமிழகத்தில் இருந்து அதிகமான அழைப்புகள் வருகின்றன. மனநல ஆலோசகர் மூலமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், நடைபெறும் மாநிலங்களில், தமிழகம், ஏழாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X