சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு; நீச்சல் தெரிந்த அண்ணனும் பலியான சோகம்

Added : நவ 16, 2020
Share
Advertisement
கொடுமுடி: கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி, சகோதரர்கள் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், சிவகிரி, அஞ்சூர், அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கசாமி. இவரின் மூத்த மகன் கோகுல், 24, கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடி, எம்.இ., படித்து வந்தார். இவரது சகோதரர் மனோஜ்குமார், 20; ஈரோடு, கலை அறிவியல் கல்லூரியில், பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்தார்.

கொடுமுடி: கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி, சகோதரர்கள் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், சிவகிரி, அஞ்சூர், அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கசாமி. இவரின் மூத்த மகன் கோகுல், 24, கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடி, எம்.இ., படித்து வந்தார். இவரது சகோதரர் மனோஜ்குமார், 20; ஈரோடு, கலை அறிவியல் கல்லூரியில், பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்தார். சகோதரர்கள் இருவரும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஐயப்பன் குடும்பத்தினர் நான்கு பேருடன், தீபாவளியை கொண்டாட, கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள, காவிரி ஆற்றுக்கு நேற்று மதியம், 2:15 மணியளவில் வந்தனர். ஆழமான பகுதியில் குளித்த மனோஜ்குமார் நீரில் மூழ்கினார். இதை பார்த்த கோகுல், தம்பியை காப்பாற்ற சென்றார். அவரை மனோஜ்குமார் கட்டிப்பிடித்து கொண்டதால், நீச்சல் தெரிந்த கோகுலும் ஆற்றில் மூழ்கினார். கொடுமுடி தீயணைப்பு துறையினர், சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு இருவர் உடலையும் மீட்டனர். சகோதரர்கள் ஆற்றில் மூழ்கி பலியானது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில், பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X