ஓசூர்: ஓசூர் வனத்தில், வேட்டை கும்பல் சுட்டதில், யானை பலியானதாக தகவல் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து, சில நாட்களுக்கு முன் வெளியேறிய மூன்று யானைகள், ஓசூர் வனச்சரகம் ஊடேதுர்க்கம் காப்புக்காட்டுக்கு இடம் பெயர்ந்தன. இந்நிலையில் யுபுரம் அருகே, 30 வயது ஆண் யானை இறந்து கிடப்பதாக, வன உயிரின காப்பாளர் பிரபுவுக்கு, நேற்று தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். தந்தங்கள் இருந்ததால், வேட்டையாடப்படவில்லை என முதலில் கூறப்பட்டது. ஆனால், வேட்டை கும்பல் யானையை சுட்டதாகவும், தந்தங்களை எடுக்காமல் தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியானது. உடற்கூறு பரிசோதனை முடிவு வந்த பிறகே, இறப்புக்கான காரணம் தெரியும் என கூறினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டில் நேற்று வரை, 12 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில், 10 யானைகள் இயற்கை மரணம் அடைந்தன. ஜவளகிரி வனச்சரகத்தில், 10 வயது பெண் யானை, கடந்த, 3ல், சுட்டுக்கொல்லப்பட்டது. நேற்று உயிரிழந்த யானையின் சாவில் மர்மம் நீடிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE