சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் குடித்ததை கண்டித்த தொழிலாளி அடித்து கொலை: சேலத்தில் சிறுவன் வெறிச்செயல்

Added : நவ 16, 2020
Share
Advertisement
சேலம்: சேலத்தில், சாராயம் குடித்ததை கண்டித்த தொழிலாளியை, சிறுவன் கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம், மணியனூர், அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 30; தகரப்பெட்டி தயாரிக்கும் தொழில் மட்டுமின்றி, வெள்ளி தொழிலும் செய்து வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள சித்தப்பா மணியரசு வீட்டில் வசித்தார். சித்தப்பா மகனான, 17 வயது

சேலம்: சேலத்தில், சாராயம் குடித்ததை கண்டித்த தொழிலாளியை, சிறுவன் கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம், மணியனூர், அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 30; தகரப்பெட்டி தயாரிக்கும் தொழில் மட்டுமின்றி, வெள்ளி தொழிலும் செய்து வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள சித்தப்பா மணியரசு வீட்டில் வசித்தார். சித்தப்பா மகனான, 17 வயது சிறுவனும், யுவராஜூடன் சேர்ந்து, பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வந்தான். மணியனூர் சுடுகாட்டுக்கு சென்று, யுவராஜ் சாராயம் குடிப்பது வழக்கம். இந்நிலையில் சிறுவனும் வந்து சாராயம் குடிக்கவே, யுவராஜ் எச்சரித்து வந்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு, சுடுகாட்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின் யுவராஜ் வீட்டுக்கு வந்துவிட்டார். சிறிது நேரத்துக்கு பின் வந்த சிறுவன், யுவராஜிடம் தகராறில் ஈடுபட்டான். வாக்குவாதம் முற்றிய நிலையில், யுவராஜ் தலையில், கல்லால் பலமாக தாக்கி விட்டு, ஓடி விட்டான். உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நள்ளிரவில் இறந்தார். அன்னதானப்பட்டி போலீசார், சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X