மோகனூர்: மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு, குரு பகவான் நேற்று இரவு, 9:47 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியனார். இதையடுத்து மாலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் குருபெயர்ச்சி விழா துவங்கியது. தொடர்ந்து, யாக வேள்வி, 108 சங்காபிஷேகம் நடந்தது. குரு பெயர்ச்சி விழாவில், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொண்டால், நன்மை பயக்கும் என்பது ஐதீகம். அதன்படி, சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர். தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். முன்னதாக, கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, மாலை, 4:00 மணிக்கு, காப்பு கட்டப்பட்டு, முளைப்பாரி போடப்பட்டது.
* நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா நேற்று ஆரம்பமானது. இதை முன்னிட்டு, கோவிலில் சுவாமிக்கு தினமும் காலையில் அபி?ஷகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. நவ., 20 காலை, 7:00 மணிக்கு சிறப்பு ?ஹாமம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் உற்சவம் நடக்கிறது. 21 மாலை, 6:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நேற்று சுவாமிக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டது. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE