ராசிபுரம்: குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்படுவதாக, டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராசிபுரம் அடுத்த, பிள்ளநல்லூர் டவுன் பஞ்சாயத்தில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், போதிய நிலத்தடி நீர் மட்டம் இல்லாததால், குடிநீர் பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன்பு, பூலாம்பட்டியில் இருந்து ராசிபுரம் வந்த, கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பிள்ளாநல்லூருக்கு காவிரி தண்ணீர் தினசரி வினியோகம் செய்யப்பட்டது. தற்போது தினசரி, 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டாலும், பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, தமிழக முதல்வருக்கு, டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வடிவேல் புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தினசரி குடிநீர் வழங்காமல், 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. பிள்ளாநல்லூருக்கு தண்ணீர் வழங்க வேண்டிய, நீரேற்று நிலையம் வெண்ணந்தூரில் இருப்பதாகவும், அவர்களிடம் விசாரித்தால் மின்சாரம் சரியாக இல்லை. அதனால், தாமதமாகிறது என்கின்றனர். ஆனால், பிள்ளநல்லூருக்கு என்று தனியாக போடப்பட்ட குடிநீர் குழாயில் இருந்து, வழியில் உள்ள ஊராட்சி கிராமங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE