பள்ளிபாளையம்: களியனூரில், திறந்தவெளியில் குப்பை கொட்டும் இடங்களில், மரக்கன்றுகள் நடவு செய்து பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், களியனூர் பஞ்சாயத்தில், பல இடங்களில் திறந்தவெளியில் குப்பை, கழிவு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், சுகாதாரமாக இருக்கவும், அங்கு மரக்கன்றுகள் வைத்து பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, பஞ்.,தலைவர் ரவி குழந்தைவேல் கூறியதாவது: திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க, சுகாதாரமாக வைத்திருக்கவும், மரக்கன்றுகள் வைக்க திட்டமிட்டோம். இதுகுறித்து, அமைச்சர் தங்கமணியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தேவையான மரக்கன்றுகளை அவர் வழங்கினார். எந்தெந்த இடங்களில் குப்பை கொட்டுகின்றனர் என, கண்டறிந்து அங்கு பல மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, தினமும் பராமரிக்கப்படுகிறது. இன்றும் இரண்டு மாதங்களில் மரக்கன்றுகள் முழுமையாக வளர்ந்து விடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE