கரூர்: கேதார கவுரி விரதத்தையொட்டி, பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தம்பதியர் ஒருவருக்கொருவர் இணைபிரியாமல், இறுதிவரை மகிழ்வுடன் வாழ, கேதார கவுரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. கலச வடிவிலோ, மண்ணால் செய்யப்பட்ட பொம்மை உருவத்திலோ, அம்பாளுடன் சிவபெருமானை தொடர்ந்து, 21 நாட்களுக்கு பூஜை செய்து, பெண்கள் வழிபட வேண்டும். இதன்படி, நேற்று முன்தினம், கரூர் மேட்டுத்தெரு நாயுடு மகாஜன சங்க மண்டபத்தில், கேதார கவுரி விரதம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து, அம்மனை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர். பின், மஞ்சள் கயிறு வைத்து, வழிபட்டு, அதை தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கைகளில் கட்டிக் கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஜனை பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை, கரூர் பலிஜவார் நாயுடு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE