கரூர்: அரவக்குறிச்சியில் இருந்து, தென்னிலைக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இருந்து கரூர், மூலனூர், கன்னிவாடி, தாராபுரம், ஈசநத்தம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறை வழியாக, தென்னிலைக்கு டவுன் பஸ்கள் செல்வதில்லை. இதனால், ஊத்தூர், மாலமேடு, தண்ணீர்பந்தல், அரிக்காரன் வலசு, ஒத்தமாந்துறை, சின்ன தாராபுரம், தென்னிலை பகுதி தொழிலாளர்கள், மாணவர்கள் அரவக்குறிச்சிக்கு எளிதாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள், சின்னதாராபுரம், ராஜபுரம் வழியாக, 15 கி.மீ., தூரம் பயணம் செய்து, அரவக்குறிச்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி பிரிவு, ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE