பொது செய்தி

தமிழ்நாடு

வட கிழக்கு பருவமழை தீவிரம்

Updated : நவ 17, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது. சென்னை கிண்டி,

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.



latest tamil news



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது. சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி, நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


latest tamil news



சென்னை அருகே காட்டாங்கொளத்தூர் மற்றும் காவனுர் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கூடுவாஞ்சேரியில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் 18 மி.மீ., மழையும், சோழவரம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் 14 மி.மீ., மழையும், செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 19.4 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது. நெல்லை முருகன்குறிச்சி ஆர்யாஸ் சூப்பர் மார்க்கெட் அருகே சாலையோர மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது.

ராமநாதபுரம், கடலூர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது.


21 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரி


சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. எப்போதும் ஏரியில் 21 அடியை நீர் தொட்டதும் உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 1,086 கனஅடியாக உள்ள நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.13 அடியாக உயர்ந்து வருகிறது. இதுபோல் சென்னை பூண்டி ஏரியிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.



டெல்டா மாவட்டங்களில் கனமழை :-


கடலுார், நாகை, காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம். தமிழகத்தின் பெரும்பாலான கடலோர மாவட்டங்களிலும், அதையொட்டிய உள் மாவட்டங்களிலும், இன்று மழை தொடர வாய்ப்புள்ளது.


latest tamil news




அறிவுறுத்தல்


தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.




துாத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்


துாத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை (நவ.17) காலை 8.30 மணி வரை அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202012:26:41 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வான் முகில் வளாது பெய்க, மலி வளம் சுரக்க. மன்னன் கோன் முறை அரசு செய்க , குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க , மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் சிவாயநம
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
16-நவ-202018:55:54 IST Report Abuse
S. Narayanan பழைய கட்டடங்கள் என்றால் எத்தனை வருடங்கள் கடந்தது என்று மக்களுக்கு தெரியுமா. மழை வருவதற்கு முன் இதை எல்லாம் கணித்து மக்களுக்கு அரசு சொல்ல வேண்டாமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X