ரஜினி அரசியலுக்கு வரலைன்னதும், கொஞ்சம் தெம்பாகி இருந்த, அ.தி.மு.க., தரப்பு, திடுமென விஜய் பெயரில் அவருடைய அப்பா கட்சித் துவங்கியதும் அதிர்ச்சியாகிட்டாங்க. இதன் பின்னணியில் விஜய்யின் முழு ஆசி இருந்து, அவர் அரசியலுக்கு வந்தால், அது, அ.தி.மு.க.,வை பாதிக்கலாம்னு, முதல்வர் நினைக்கிறார். அதனால, விஜய்க்கும் அவருடைய அப்பா சந்திரசேகருக்கும் நடக்குற மோதல் உண்மையானதுதானான்னு, உளவுத்துறை மூலமா தகவல் சேகரிக்க கூறியுள்ளார், முதல்வர்...!
ஸ்டாலின் ‛அப்செட்'

பீஹார்ல சட்டசபைத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று, தேஜஸ்வி யாதவ் முதல்வராக பதவி ஏற்பார்னு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ரொம்பவே எதிர்பார்ப்பில் இருந்தார். தேஜஸ்வி யாதவ் முதல்வரா பதவி ஏற்கும் விழாவுக்கு, மகன் உதயநிதியோட போகலாம்னு முடிவும் செய்திருந்தார். ஆனா, கருத்து கணிப்பு முடிவுகள் பொய்யாகி, பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றதும், ஸ்டாலின் ரொம்பவே, ‛அப்செட்' ஆகிட்டாராம்...அடுத்து, தமிழகத்திலும், இதேமாதிரி, பா.ஜ., எழுச்சி வேகமாக இருக்குமோங்கிற அச்சம், தி.மு.க., தரப்புக்கு ஏற்பட்டுள்ளது...!
ம.தி.மு.க.,வுக்கு 5 தான்
தி.மு.க., கூட்டணியில் இந்த தடவை எல்லா கட்சிகளுக்குமே, ரேஷன் முறையில சீட் கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்... அந்த வகையில, ம.தி.மு.க.,வுக்கு, ஐந்து தொகுதிகளை மட்டுமே கொடுக்க, தி.மு.க., தலைமை முடிவெடுத்து, அதை வைகோவுக்கும் தெரியப்படுத்திட்டாங்களாம்...ஆனா வைகோ, இரட்டை இலக்கத்துல தொகுதிகளை பெற முயற்சி செய்து வருகிறார். குறைந்தது எட்டு சீட்டாவது ஒதுக்கணும்னு, ஸ்டாலின்கிட்டே நேரடியாவே வைகோ சொல்ல போறாராம்...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE