காங்., சரியான மாற்றுக் கட்சி அல்ல : கபில் சிபல் கருத்து டிரெண்டிங்

Updated : நவ 17, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
புதுடில்லி : ''பீஹார் தேர்தல் முடிவைப் பார்த்த பின், இந்த தேசத்தின் மக்கள் காங்., கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை'' என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பேசியிருப்பது டிரெண்ட் ஆனது. பீஹார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியிட்டு 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் காங்., 27
KapilSibal, Slams, Congress, BiharElection, கபில்சிபல், காங்கிரஸ், இயல்பு சூழல், மோசமாகும், பீஹார் தேர்தல்

புதுடில்லி : ''பீஹார் தேர்தல் முடிவைப் பார்த்த பின், இந்த தேசத்தின் மக்கள் காங்., கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை'' என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பேசியிருப்பது டிரெண்ட் ஆனது.

பீஹார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியிட்டு 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் காங்., 27 இடங்களில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. காங்., கட்சியின் இந்த சரிவு அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாததால் தான் இப்படி நடக்கிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.


latest tamil news




இந்நிலையில் காங்., கட்சியின் செயல்பாடுகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அளித்த பேட்டி பரபரப்பாகி உள்ளது.

அதில் அவர் கூறியிருப்பதாவது : காங்கிரஸ் கட்சியில் உள்ள அனுபவமான தலைவர்கள், அனுபவமான மனநிலை உள்ளவர்கள், அரசியல் களச்சூழலை அறிந்தவர்கள் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. நம்மிடம் தான் பதில் இருக்கிறது. துணிச்சலுடன், விருப்பத்துடன் நாம் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சி சார்ந்த விஷயங்கள், ஊடகங்களில் உரையாடுவது, மக்கள் யார் பேச்சைக் கேட்க விரும்புகிறார்களோ அவர்களை நிறுத்துவது, சுறுசுறுப்பான, சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை வழங்குதல் போன்றவை அவசியம்.

பீஹார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாகத்தான் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக என்ன தவறு இருக்கிறது என்பதும் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கும் அனைத்துப் பதில்களும் தெரியும். ஆனால், அவர்கள் அதை ஏற்க விருப்பமில்லை. அனைத்தும் நன்றாக உள்ளன என நினைக்கின்றனர். இயல்பில் உள்ள சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்., கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும். பீஹார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், இந்த தேசத்தின் மக்கள் காங்., கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.


latest tamil news




இவரின் பேட்டி சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. இவரின் கருத்தை காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களும் கூட வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரியும், நீங்கள் எதுவும் கூற வேண்டாம் என கபில் சிபலுக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் கபில் சிபலின் பேட்டி தேசிய அளவில் #KapilSibal, #Congress ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
17-நவ-202019:38:50 IST Report Abuse
dina இந்த தேசத்தின் மக்கள் காங்., கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை இது காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரியும்
Rate this:
Cancel
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
17-நவ-202018:28:58 IST Report Abuse
Guna Gkrv காங்கிரஸுக்கு சரியான துடிப்பான தலைவர் வேண்டும் ராகுல் இன்னும் குழைதையாகவே இருக்கிறார் கட்சியை எப்படி பலப்படுத்துவது என்று நினைக்காமல் அடுத்தவரை குறை சொல்லி காலம் தள்ளுவது சரியல்ல எனவே உடனடியாக நல்ல தலைவரை தேர்ந்து எடுத்து கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் எல்லோரையும் அரவணைத்து புதிய செயல்முறைகள் செய்து கட்சியை வளர்க்க வேண்டும் இப்படியேய் போனால் காங்கிரஸ் என்ற கட்சி இந்தியாவில் இருக்காது.
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
17-நவ-202016:15:16 IST Report Abuse
ganapati sb ஜனநாயகத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத அரசியலில் சுவாரஸ்யமில்லை ஒருமுறை தோற்றாலும் மறுமுறை வெற்றி பெறும் மக்கள் இயல்பு அறிந்த தலைவர்களாக இருக்கும் பஞ்சாபின் அம்ரிந்தர் சிங் ராஜதானின் அசோக் கெலோட் கேரளாவின் உம்மன் சாண்டி போன்றவர்களை காங்கிரசின் அகில இந்திய தலைவராக நியமிக்கலாம். இல்லையேல் ப்ரியங்காவையாவது முயற்சி செய்து பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X