2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும்: உலக உணவு கழகத்தின் தலைவர் எச்சரிக்கை

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என உலக உணவுக் கழகத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு கடந்த மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு, உலகம் முழுவதும் வறுமையில் வாடும் நபர்களுக்கு 52 ஆண்டுகளாக உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மோசமானதாக
Nobel, UN_FoodAgency, Warns, 2021, Worse, உலக உணவுக் கழகம், தலைவர், டேவிட் பேஸ்லி

வாஷிங்டன்: 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என உலக உணவுக் கழகத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு கடந்த மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு, உலகம் முழுவதும் வறுமையில் வாடும் நபர்களுக்கு 52 ஆண்டுகளாக உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி கூறியுள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அசோசியேட்டட் ப்ரஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐ.நா அமைப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டை விட, அடுத்த ஆண்டு (2021) மோசமானதாக இருக்கும். 2021ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உலக நாடுகளின் தலைவர்கள் பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் செய்ததன் காரணமாக நம்மால் 2020ம் ஆண்டில் பஞ்சத்தை ஓரளவிற்கு தவிர்க்க முடிந்தது.

பல நாட்டின் உலக தலைவர்களை நேரில் சந்தித்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வின்படி, அடுத்த சில மாதங்களில் ஏமன், தெற்கு சூடான், வடகிழக்கு நைஜீரியா மற்றும் புர்கினா பாசோ உள்ளிட்ட 20 நாடுகள் அதிக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள்ளான சாத்தியங்களை எதிர்கொள்ளக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-நவ-202022:53:04 IST Report Abuse
Ramesh Sargam 2020 ஆம் ஆண்டு ஏதோ நல்லபடியாக அமைந்ததுபோல இவர் 2021 ஆம் ஆண்டினை பற்றி பேசுகிறார்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
16-நவ-202019:15:47 IST Report Abuse
S. Narayanan ஏற்கனவே கொரோனாவினால் மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள். இதில் இவர் இன்னும் மக்களை நிம்மதி இழக்க செய்கிறார். முடிந்தால் அதற்க்கு தகுந்த தீர்வை சொல்லி மக்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
16-நவ-202017:09:13 IST Report Abuse
Balakrishnan Kamesh 2021 ஆம் ஆண்டிலும் இந்த அமைப்பிற்கு நோபல் பரிசிற்கு உணவு தலைவர் அடி போட்டிருக்கிறார் ... மற்றபடி இந்தியாவை பொறுத்தவரை பஞ்சத்திற்குதான் பஞ்சம் ஏற்படும் ...யாரும் பயப்படத்தேவையில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X