சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி விபத்து; 8 வயது சிறுமி பலி

Added : நவ 16, 2020
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அருகே, அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில், ரோட்டோரத்தில் நடந்து சென்ற, எட்டு வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.திருப்பூரை சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியர் புவனேஸ்வரன், 40. இவரது மனைவி பிரியா, 38, மகள் வர்ஷா, 8. இவர்கள் நேற்று காலை, ஆழியாறு பகுதிக்கு உறவினர்கள் வீட்டுக்கு, ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே உறவினர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கார் மோதி விபத்து; 8 வயது சிறுமி பலி

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அருகே, அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில், ரோட்டோரத்தில் நடந்து சென்ற, எட்டு வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.

திருப்பூரை சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியர் புவனேஸ்வரன், 40. இவரது மனைவி பிரியா, 38, மகள் வர்ஷா, 8. இவர்கள் நேற்று காலை, ஆழியாறு பகுதிக்கு உறவினர்கள் வீட்டுக்கு, ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே உறவினர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், இவர்கள் மீது மோதியது.

இதில், வர்ஷா, புவனேஸ்வரன், பிரியா மற்றும் அவர்களது உறவினர்கள், இலக்கியா, 22, துர்கா, 28, யுவராஜ், 35, சபரி, 30, ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், எட்டு வயது சிறுமி வர்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆறு பேர் படுகாயமடைந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதிவேகமாக கார் ஓட்டி வந்த, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ரமேஸ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X