சென்னை: தீபாவளி பண்டிகை காலத்தில், விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு, 23.36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாகனங்களின் விதிமீறல் தொடர்பான சோதனைகளுக்காக, போக்குவரத்து சரக இணை, துணை கமிஷனர்கள் தலைமையில், மாநிலம் முழுதும், 48 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.கடந்த, 11ம் தேதி முதல், 14ம் தேதி வரை, மொத்தம், 5,598 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில், 397 ஆம்னி பஸ்கள்; ௫58 மற்ற வாகனங்களுக்கு, விதிமீறலுக்கான சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு, 23.36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதில், 9.50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 13.86 லட்சம் ரூபாயை பின்னர் வசூலிக்கும் வகையில், ரசீதுகள் வழங்கப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட இரண்டு ஆம்னி பஸ்கள் உட்பட, எட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வரி செலுத்தாத வாகனங்களிடம் இருந்து, 2.41 லட்சம் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE