94% சக்தியுடைய கொரோனா தடுப்பூசி: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பயன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி

வாஷிங்டன்:அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பயன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsகொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.


latest tamil newsஇந்நிலையில், மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பயனுடையது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி 94.5 சதவீதம் கொரோனா வைரசை கடுப்படுத்தி உள்ளது.
கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த மார்டனா தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான பிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், மற்றொரு தடுப்பூசி வந்துள்ளது நம்பிக்கையூட்டுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maddy - Chicago,யூ.எஸ்.ஏ
17-நவ-202007:13:52 IST Report Abuse
Maddy Proud to be one of the volunteer for this Moderna vaccine trial in US... திருச்சி தமிழன்டா
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-நவ-202022:43:54 IST Report Abuse
Vijay D Ratnam PFIZER நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தோடு பேரு பிப்சர் இல்ல அண்ணாத்தே, ஃபைசர். அப்ப எதுக்கு அந்த மொதோ எழுத்து P தண்டத்துக்கு என்றெல்லாம் கேக்கப்படாதுங்கோ.
Rate this:
Cancel
16-நவ-202021:09:33 IST Report Abuse
Truth Behind Some plan is going on, hope during Christmas or New year vaccine will get introduce. Pray to God it should happen.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X