வீடியோ வெளியானால் அமைச்சருக்கு ஆபத்து?
''அவரை கொஞ்சம் தட்டி வைக்கணும்ன்னு சொல்றா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''யாரை, எதுக்குன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பெரம்பலுார் கலெக்டருக்கு, 'பர்சனல் கிளார்க்'காக பல வருஷமா இருப்பவர், சேகரமானவர்... எந்த கலெக்டர் வந்தாலும், அவரை கைக்குள்ள போட்டுண்டு, எல்லா விஷயத்தையும்
பார்த்துப்பார் ஓய்...
''சில கலெக்டர்களுக்கு, வசூல் விஷயத்துலையும் புரோக்கரா செயல்பட்டுருக்கார்... இப்போ, புதுசா வந்துருக்கற கலெக்டருக்கும், பர்சனல் கிளார்க்கா இருக்கார் ஓய்...
''மாவட்ட அதிகாரிகள் கூட, கலெக்டரை சந்திக்க விடாமல், அவர் தடுக்கறார்... கலெக்டர் பெயரைச் சொல்லி, அதிகாரிகளை மிரட்டறார்...
''புது கலெக்டர், அவரை கொஞ்சம் தட்டி வைக்கணும்ன்னு, அதிகாரிகள் எதிர்பார்க்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஏட்டு ஒருத்தர், எஸ்.பி., கண்ணுலையே, விரலை விட்டு ஆட்டியிருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''என்ன சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''திருச்சி, சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தனிப் பிரிவு ஏட்டாக, கேசவன்ங்கறவர், ஒன்பது வருஷமா வேலை பார்த்தாரு...
''ஏகப்பட்ட குற்றச்சாட்டு இவர் மேலே... துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாத்தினாங்க... அங்கேயும் சும்மா இல்லே...
''அதே சமயம், திருச்சி எஸ்.பி.,க்கு அழுத்தம் குடுத்து, ஏற்கனவே வேலை பார்த்த டிவிஷன்ல, இனாம்குளத்துார் போலீஸ் ஸ்டேஷன்ல வேலையை மாத்திக்கிட்டாரு... நேர்மையான எஸ்.பி., இவரோட அழுத்தத்துக்கு எப்படி சம்மதிச்சாருங்கறது தான் இப்போதைய கேள்வி...'' என்றார் அன்வர்பாய்.
''விரைவில் இன்னொரு வீடியோ வரும் போலிருக்குங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யார் ஓய்... சசிகலாவோடதா...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''இல்லீங்க... இது ஒரு அமைச்சர் பத்தினது... கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனோட பி.ஏ., கர்ணன்கிறவர், செப்., 23ல கடத்தப்பட்டாரு... எம்.எல்.ஏ., ஆபீசுலேர்ந்தே துாக்கிட்டாங்க... இது சம்பந்தமா, ஏழு பேரை அரெஸ்ட் காட்டினாலும், முக்கிய நபர், எதிர்க்கட்சி வக்கீலோட தயவுல, தலை
மறைவாகிட்டாரு...
''இப்ப வீடியோ என்னன்னா, கடத்தல் செஞ்சி கூட்டிட்டுப் போறப்போ, கார்ல வச்சு, குடோன்ல வச்சுன்னு, இந்த நபர்கிட்டேர்ந்து ஏகப் பட்ட வாக்குமூலத்தை, கடத்தல்காரங்க பிடிங்கி இருக்காங்க... இந்த வீடியோக்கள் வெளியே வந்துச்சின்னா, ராதாகிருஷ்ணன் கதி என்னாகுமோ
தெரியலீங்க...'' என்றார் அந்தோணிசாமி.''மடியில கனம் இருக்கோ...'' எனக் கேள்வி கேட்டபடி கிளம்பினார் குப்பண்ணா. நண்பர்களும் நடையைக் கட்டினர்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE