பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், 4.4 கி.மீ., தொலைவு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்படுகிறது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அடுத்தடுத்து நடக்கிறது. தற்போது, மாநில நெடுஞ்சாலை துறையின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், பல்லடம் ரோடு விரிவாக்கப்படுகிறது.இதில், கிழக்கு புறவழிச்சாலை பல்லடம் ரோட்டில் சந்திக்கும் பகுதியான கரப்பாடி பிரிவில் இருந்து, கள்ளிப்பட்டி பிரிவு வரையிலான, 4.4 கி.மீ., தொலைவு, இரு வழிச்சாலையில் இருந்து, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்படுகிறது.இப்பகுதியில், ரோடு, 7 மீட்டர் அகலத்தில் இருந்து, இருபக்கமும் தலா, 7.5 மீட்டர் அகலத்துக்கு சென்டர் மீடியனுடன் விரிவாக்கப்படுகிறது. இதில், 10 சிறு பாலங்களும் அமைக்கப்படுகின்றன.புளியம்பட்டியை அடுத்துள்ள மேடான பகுதியில், எதிரே வரும் வாகனங்கள் பார்வையில் இருந்து மறைத்து விபத்து ஏற்படுத்துவதால், ஏழு அடி உயரம் குறைத்து சமப்படுத்தப்படுகிறது.இந்தப் பணிகளின் திட்ட மதிப்பு, 15 கோடி ரூபாயாகும். பணிகள் நடக்கும் பகுதியில், வாகன ஓட்டுனர்கள் வேகத்தை குறைத்து இயக்குமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE