சிறப்பு பகுதிகள்

உரத்த குரல்

'குல்லுக பட்டர்' என அழைக்கப்பட்டவர் யார்? புரிந்து கொள்ளுமா காங்கிரஸ்?

Added : நவ 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement
'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்று சொன்னால், 'ஆஹா... பிறவியில் கடைத்தேறும் அளவுக்கு ஞானோதயம் வந்துவிட்டது அரசியல்வாதிகளுக்கு...' என்றெல்லாம் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்து ஓட்டு போடுபவர்களே... இதைப் படியுங்கள்!சேவை செய்வதற்காக என்று சொல்லி, பொருந்தாத கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டு, வாக்காளர்களை வாக்குறுதி என்ற மாயையில்

'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்று சொன்னால், 'ஆஹா... பிறவியில் கடைத்தேறும் அளவுக்கு ஞானோதயம் வந்துவிட்டது அரசியல்வாதிகளுக்கு...' என்றெல்லாம் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்து ஓட்டு போடுபவர்களே...இதைப் படியுங்கள்!சேவை செய்வதற்காக என்று சொல்லி, பொருந்தாத கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டு, வாக்காளர்களை வாக்குறுதி என்ற மாயையில் மயக்கி, அவர்களது ஓட்டுகளை ஏமாற்றிப் பெற்று வென்று பதவியில் அமர்வதெல்லாம், தங்களுக்குத் தாங்களே சேவை செய்து கொள்ளும் வகையில், அரசு கஜானாவையும், உங்களின் மணி பர்சையும் கொள்ளையடிக்கத் தானே தவிர, உங்களுக்கு நல்லது செய்வதற்காக அல்ல!ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்!இந்தியாவில் ஒரே கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி - லெனின், கம்யூனிஸ்ட் கட்சி - ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி - குருஷேவ், கம்யூனிஸ்ட் கட்சி - புடின், கம்யூனிஸ்ட் கட்சி - நக்சலைட் என்று, பல கூறாக பிரிந்தது ஏன்...கொள்கை பிடிக்காமலா அல்லது பதவி கிட்டவில்லையே என்ற ஏக்கமா? அவர்களுக்கே வெளிச்சம்!பிரிந்தாகி விட்டது. அதன் பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாமா? மாட்டார்கள்! கூட்டணி வைக்கலாமா? கூடாது!ஆனால், பீஹாரில், எல்லாமே ஒன்று சேர்ந்து, லாலுவின் மகனுக்கு ஆதரவு கொடுத்து, சில பல இடங்களையும் பிடித்து விட்டன. ஆனால், ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது தான் சோகம்!இங்கே தமிழகத்திலும், நயவஞ்சகமாக மக்களை ஏமாற்றி, பெரிதாக உருவெடுத்த கட்சியும் இப்படி தான் செய்கிறது!கடந்த, 1967ல், மூதறிஞர் ராஜாஜி, காங்கிரஸ் மீதிருந்த கோபத்தில், தி.மு.க, தலைமையில் ஒன்பது கட்சிகளை சேர்த்து ஒரு கூட்டணி அமைத்திருக்காவிட்டால், இன்று வரை தி.மு.க., ஆட்சியில் அமர்ந்து இருக்கவே முடியாது; காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்து இருக்காது!விதி வேலையைக் காட்டும் போது, புத்தி வேலை செய்யாது என்று, பெரியோர் சொல்வது வழக்கம்.தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் அமர வழி அமைத்துக் கொடுத்த மூதறிஞர் ராஜாஜியையே, ஆட்சியில் அமர்ந்தவுடன், 'குல்லுக பட்டர்' என்று அழைத்துக் குதுாகலித்தார் கருணாநிதி!கொட்டும் மழையில் கருணாநிதியை வீடு தேடி வந்து, 'சாராயக் கடையை திறக்காதீர்கள்' என்று அந்த மூதறிஞர் விடுத்த வேண்டு கோளை புறக்கணித்து, ஒதுக்கித் தள்ளி, சாராயக் கடைகளைத் திறந்தார்.அதன் பிறகு, தேர்தல் கூட்டணியோ, தொகுதி உடன்பாடோ தி.மு.க.,வுடன் செய்து கொள்ளலாமோ? உப்பே தின்று பழக்கமில்லை போலிருக்கு காங்கிரசுக்கு! தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, வெட்கம் பிளஸ் மானம் கெட்டு, சவாரி செய்கிறது.அண்ணா அறிவாலயத்தில், ஒரு தளத்தில் சி.பி.ஐ., விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, மற்றொரு தளத்தில், எந்த காங்கிரஸ் ஆட்சி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதோ, அதே கட்சியோடு, கூட்டணி உடன்பாடு செய்து கொண்டிருந்தது தி.மு.க.,இதிலிருந்து, வாக்காளர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன வென்றால், அரசியல் கட்சிகளுக்கு பதவியில் அமர வேண்டும்; நாட்டைச் சுரண்ட வேண்டும்; முடிந்தவரை பதவியில் இருக்கும் போது, வாரி வாரி குவித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒன்று தான் குறிக்கோள்; சேவையாவது, வெங்காயமாவது!மேற்படி 'உன்னத' குறிக்கோளை அடைய, அவர்கள் எந்த லெவலுக்கும் இறங்குவர்; எந்த காரியத்தையும் செய்வர்!காங்கிரஸ் போலா நாம்... உப்பு தின்கிறோமே; சுரணை கூட்டிக் கொள்வோம்!- துர்வாசர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X