லேடியுடன் ஏட்டு... 'செல்பி'யால் வந்த வேட்டு!

Added : நவ 17, 2020 | |
Advertisement
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.வாக்காளர் விவரங்களை அறிந்துகொண்டு, வெளியே வந்த சித்ரா, ''மித்து, வழக்கம்போல, நம்ம மாவட்டத்திலும் லேடீஸ் ஓட்டு அதிகமா இருக்கு,'' என்றாள்.''அக்கா...அது கிடக்கட்டும். ''அமைச்சர் வேலுமணியின் அதிகார பரப்பு எல்லை அதிகமாயிடுச்சாமே,'' என,
 லேடியுடன் ஏட்டு... 'செல்பி'யால் வந்த வேட்டு!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.வாக்காளர் விவரங்களை அறிந்துகொண்டு, வெளியே வந்த சித்ரா, ''மித்து, வழக்கம்போல, நம்ம மாவட்டத்திலும் லேடீஸ் ஓட்டு அதிகமா இருக்கு,'' என்றாள்.''அக்கா...அது கிடக்கட்டும். ''அமைச்சர் வேலுமணியின் அதிகார பரப்பு எல்லை அதிகமாயிடுச்சாமே,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.''அதுவா, கட்சியில் புறநகர் மாவட்ட செயலாளரா இருக்காரு. கோவை, திருப்பூர், நீலகிரின்னு மூனு மாவட்டங்களை சேர்த்து, தேர்தலுக்கு மண்டல பொறுப்பாளரா நியமிச்சிருக்காங்க. அதனால, ஆளுங்கட்சிக்காரங்க, காலரை துாக்கி விட்டு, தெம்பா சுத்த ஆரம்பிச்சிட்டாங்க,''''கோவை வடக்கு தொகுதியை தக்க வைக்கிறதுக்காக, ஏகப்பட்ட உதவிகளை, ஆளுங்கட்சிக்காரங்க செஞ்சுக்கிட்டு வர்றாங்க. ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு, காரம், பட்டாசு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொடுத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்காங்க,''''அந்த தொகுதியில், போன தேர்தலில், சொற்ப ஓட்டு வித்தியாசத்துலதான், தி.மு.க., தோத்துச்சு. வரப்போற தேர்தலில், எப்படியாவது ஜெயிக்கணும்னு கட்சி மேலிடம் உத்தரவு போட்டிருக்குதாம்,''''அதுக்கு, உள்ளடி வேலை செய்யாம இருக்கணுமே,'' என்ற சித்ரா, ''தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், ஆளுங்கட்சிக்காரங்களுக்கு ஸ்வீட் பாக்ஸ், பேன்ட்ஸ் பிட், சேலை-, பட்டாசு கிப்ட் பாக்ஸ்- வழங்கியிருக்காங்க. ஆனா, துடியலுார் ஏரியாவுல இருக்குற கட்சி பிரமுகர், கட்சியில் இருந்து கொடுத்த நிதியை அமுக்கிட்டாராம்,''''அப்படியா, என்ன நடந்துச்சு, விளக்கமா சொல்லுங்களேன்,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீசுக்கு அருகில் உள்ள பேக்கரிக்கு நடந்து சென்ற சித்ரா, ''ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு, மதுக்கடையில் இருந்து மாசம் தவறாமல், மாமூல் கொடுத்திட்டு இருந்தாங்க. கொரோனா காலத்துல, கடைகள் மூடியிருந்ததால, மாமூல் வசூலில் வெட்டு விழுந்திருக்கு. இதை உணர்ந்த மேலிடம், அடிமட்ட நிர்வாகிகளுக்காக ஒரு தொகையை வழங்கியிருக்கு. அந்த தொகையை, துடியலுார்காரர் அமுக்கிட்டதா, கட்சிக்காரங்க புலம்புறாங்க,'' என்றாள்.''அக்கா, கட்சிக்காரங்க, எப்பவுமே அப்படித்தான்,'' என்றபடி, வெஜ் பப்ஸ், லெமன் டீ ஆர்டர் கொடுத்த மித்ரா, ''தாலிக்கு தங்கம் கேட்டு, யாராவது விண்ணப்பிச்சா, வீட்டுக்குப் போயி, உண்மைத்தன்மையை விசாரிக்கணுமாம். இதுக்காக, ஊர் நல அலுவலர்கள் நியமிச்சிருக்காங்க. இப்பணி செய்ற சிலர், 1,000 முதல், 2,000 ரூபாய் லஞ்சம் வாங்குறாங்களாம். மதுக்கரை ஏரியாவுல இருந்து, அதிக புகார் வருதாம்,'' என்றபடி, பப்ஸ்சை ருசிக்க ஆரம்பித்தாள்.''லட்சம் லட்சமா சம்பளம் வாங்குனாலும், அரசாங்க அதிகாரிகளில் சிலர், லஞ்சம் வாங்குறதை விட மாட்டாங்க போலிருக்கு,'' என்ற சித்ரா, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான், வடக்கு தாசில்தார் ஆபீசுல லஞ்ச ஒழிப்பு துறையினர் 'ரெய்டு' நடத்துனாங்க. குளிர் விட்டு போச்சுன்னு சொல்வாங்களே; அது மாதிரி, கணபதி கிழக்கு வி.ஏ.ஓ., ஆபீசுல இருந்து வர்ற புரோக்கருக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதியாம்,''''பெரும்பாலான புரோக்கர்கள், கோப்புகளை அவரிடம் கொடுத்து அனுப்புறாங்களாம். கோப்புகளும், கரன்சியும் ஒவ்வொரு டேபிளுக்கும் கனகச்சிதமா பட்டுவாடா செய்றாங்களாம். சரவணம்பட்டியை சேர்ந்த ஒருத்தரும், இதே பாணியை கடைபிடிக்க ஆரம்பிச்சிட்டாராம். இந்த ரெண்டு பேரை கவனித்தால் போதுமாம்; வருவாய்த்துறை சான்றுகளை ஈசியா வாங்கலாமாம்,'' என்றபடி, லெமன் டீயை உறிஞ்சினாள்.''அக்கா, லஞ்சமா வாங்குன தொகையையும் திருப்பிக் கொடுத்த சம்பவமும், நம்மூர்ல நடந்திருக்கு தெரியுமா,'' என, புதிர் போட்டாள் மித்ரா.''அப்படியா, ஆச்சரியமா இருக்கே. எந்த டிபார்ட்மென்ட்டுல நடந்துச்சு,'' என, ஆர்வமாய் கேட்டாள் சித்ரா.''கல்கொத்தி உள்ளிட்ட கிராமங்களில், பசுமை வீடு கட்டியிருக்காங்க. சோலார் விளக்கு மாட்டுறதுக்கு, ரூ.500-700 வரை பணம் வசூலிச்சிருக்காங்க. பணம் கொடுக்க முடியாத பழங்குடியினர், கலெக்டரிடம் புகார் சொல்றதுக்கு முடிவு செஞ்சிருந்தாங்களாம். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும், வசூலிச்ச தொகையை, பயனாளிகளிடம் திரும்ப ஒப்படைச்சிட்டாங்களாம்,''''அதெல்லாம் இருக்கட்டும். கலெக்டர் காதுக்கு புகார் போனதும், மேட்டுப்பாளையம் அரசு டாக்டரை, ஊட்டிக்கு துாக்கியடிச்சிட்டாங்களாமே,'' என, நோண்டினாள் சித்ரா.''அதுவா, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், மூணு வருஷமா ஏகப்பட்ட வசதிகள் செஞ்சிருக்காங்க; நோயாளிகள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தியிருக்காங்க. இதை ஆய்வு செய்த மத்திய அரசு, சிறந்த மருத்துவமனைன்னு சொல்லி, விருது, சான்றிதழ் கொடுத்து, கவுரவப்படுத்தி இருக்கு,''''மருத்துவமனையில் வேலை பார்க்குறவங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். 'பார்ட்டி' வைக்கணும்னு சொல்லியிருக்காங்க. விருது வாங்குன சந்தோஷத்துல, தடபுடலா விருந்து வச்சிருக்காரு, 'டியூட்டி' பார்த்த டாக்டர். தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருத்தரு, மாவட்ட நிர்வாகத்துக்கு, 'போட்டுக்' கொடுத்திட்டாரு,''''கொரோனா காலத்துல, விருந்து உபசாரம் அவசியமான்னு, அவரை, ஊட்டிக்கு இட மாறுதல் செஞ்சிட்டாங்களாம். தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சொன்ன புகாரை நம்பி, 'டிரான்ஸ்பர்' கொடுக்கலாமா, மறுபடியும் மேட்டுப்பாளையத்திலேயே, அந்த டாக்டரை நியமிக்கணும்னு, வாட்ஸ்ஆப்' குழுக்களில் குறுஞ்செய்தி, வைரலா பரவிட்டு இருக்கு,''''நேர்மையா இருந்தால், எந்த டிபார்ட்மென்டிலும் மரியாதை கிடைக்காது போலிருக்குப்பா,'' என, அங்கலாய்த்த சித்ரா, ''போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. இந்த ஸ்டேஷனுக்கு புதுசா வந்திருக்கிற, சப்-இன்ஸ்பெக்டர் ஒருத்தரு, 'இல்லீகல்' விஷயங்களில் ஈடுபடுறவங்களை, கைது செஞ்சு, கம்பி எண்ண வச்சிருக்காரு,''''யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்குறாங்கன்னு, ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, வீடியோவில் பதிவு செஞ்சிருக்காங்க. கதிகலங்கிய, மாமூல் பார்ட்டிகள் உஷாராகி, சப்-இன்ஸ்பெக்டர் மேலேயே புகார் மழை வாசிச்சிருக்காங்க; இப்ப, கன்ட்ரோல் ரூமில், 'மைக் வாட்ச்' பண்ணிட்டு இருக்காரு,'' என்றாள்.''அடப்பாவமே,'' என, 'உச்' கொட்டிய மித்ரா, ''யாரோ ஒருத்தரு, 'செல்பி' எடுத்து மாட்டிக்கிட்டாராமே,'' என, கிளறினாள்.''ஆமா, மித்து! உண்மைதான். போத்தனுார் ஸ்டேஷன்ல ஏட்டா இருக்குற ஒருத்தருக்கு, கஞ்சா விக்கிற லேடியுடன் நெருக்கமான உறவு இருக்காம். லேடி வீட்டுக்கு போயிருந்த சமயத்தில், 'செல்பி' எடுத்திருக்காரு,''''அந்த புகைப்படத்தை, கல்லுாரியில் படிக்கற அவரோட மகன் பார்த்து, ஆவேசப்பட்டு, ஸ்டேஷனுக்கு வந்து உயரதிகாரியிடம் புலம்பியிருக்காரு. 'எங்கப்பன் லீலையை பாருங்க; ஏதாச்சும் நடவடிக்கை எடுங்க' ன்னு பொங்கிட்டு போயிருக்காரு. இதைக்கேட்டு நொந்து போயிருக்காரு, அந்த உயரதிகாரி,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.தீயணைப்பு துறை அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, இந்த ஆபீசில் வேலை பார்க்குறவங்க, ரொம்பவே பயத்துல இருக்காங்களாம். இரண்டு அதிகாரிகள், லஞ்சம் வாங்குன குற்றத்துக்காக, ஜெயிலுக்கு போனாங்க; ஒருத்தரு, மாரடைப்பு ஏற்பட்டு, இறந்துட்டாரு. அதனால, நிலைய ஊழியர்கள் பீதியில் இருக்காங்களாம்,'' என்றாள்.திருச்சி ரோட்டில், ஸ்கூட்டரை திருப்பிய சித்ரா, அரசு மருத்துவமனையை பார்த்ததும், ''மித்து, கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடா இருக்குதாம். இருதயம், சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட மருந்துகளை கேட்டால், வெளியே வாங்கச் சொல்றாங்களாம். ஏழை எளிய ஜனங்க, பணத்துக்கு எங்க போவாங்க,'' என, பரிதாபப்பட்டாள்.ஸ்கூட்டரில் பயணமாகிக் கொண்டே, ரோட்டோரம் ஒட்டியிருந்த போஸ்டர்களை கூர்ந்து கவனித்த மித்ரா, ''அக்கா, மறுபடியும் தி.மு.க.,வை சீண்ட ஆரம்பிச்சிட்டாங்க, போலிருக்கே,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, ஆளுங்கட்சிக்காரங்க கைங்கரியம்தான். இதுக்கு முன்னாடி, பெயரில்லாமல், ஒட்டியிருந்தாங்க. இப்ப, 'ஆதித்தமிழர் மக்கள் கட்சி' பெயரில் ஒட்டியிருக்காங்க. இனி, போஸ்டர் யுத்தம் ஆரம்பிக்கும் போலிருக்கு. இப்படி செஞ்சா, மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்னு, புரியாம நடந்துக்கிறாங்க,''''அதிருக்கட்டும்! தீபாவளிக்கு முந்தைய நாள், டிராவல்ஸ் நடத்துறவங்க, கரன்சியை அள்ளுனாங்களாமே,''''சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே டெம்போ டிராவலர், வேன், தனியார் பஸ்களை நிறுத்தி, மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு 'டிரிப்' அடிச்சிட்டு இருந்துருக்காங்க. போக்குவரத்து துறையினர், பக்கத்துலேயே நின்னுட்டு இருந்தும், கண்டுக்கலையாம்,''''அதெப்படி, கேட்பாங்க! கொஞ்ச நாளாவே, தீபாவளி கலெக்சன்ல மட்டுமே குறியா இருந்திருக்காங்க. குறைந்த பட்சம், 10 முதல், 20 வாகனங்கள் வரை பராமரிக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்கள், ஆம்னி பஸ் நடத்துற நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர்களே நேரில் போயிருக்காங்க; புத்தாடை, பட்டாசு, இனிப்பு, ரொக்கம்னு, அள்ளிட்டு வந்திருக்காங்க,''''ஓ... அப்படியா,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X