அரசியல் செய்தி

தமிழ்நாடு

'குல்லுக பட்டர்' என அழைக்கப்பட்டவர் யார்? புரிந்து கொள்ளுமா காங்கிரஸ்

Updated : நவ 17, 2020 | Added : நவ 17, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்று சொன்னால் 'ஆஹா... பிறவியில் கடைத்தேறும் அளவுக்கு ஞானோதயம் வந்துவிட்டது அரசியல்வாதிகளுக்கு...' என்றெல்லாம் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்து ஓட்டு போடுபவர்களே... இதைப் படியுங்கள்!சேவை செய்வதற்காக என்று சொல்லி பொருந்தாத கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வாக்காளர்களை வாக்குறுதி என்ற மாயையில்
DMK, Congress, Karunanidhi, Rajaji, திமுக, காங்கிரஸ், கருணாநிதி, ராஜாஜி

'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்று சொன்னால் 'ஆஹா... பிறவியில் கடைத்தேறும் அளவுக்கு ஞானோதயம் வந்துவிட்டது அரசியல்வாதிகளுக்கு...' என்றெல்லாம் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்து ஓட்டு போடுபவர்களே... இதைப் படியுங்கள்!

சேவை செய்வதற்காக என்று சொல்லி பொருந்தாத கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வாக்காளர்களை வாக்குறுதி என்ற மாயையில் மயக்கி அவர்களது வாக்குகளை ஏமாற்றிப் பெற்று வென்று பதவியில் அமர்வதெல்லாம் தங்களுக்குத் தாங்களே சேவை செய்து கொள்ளும் வகையில் அரசு கஜானாவையும் உங்களின் மணி பர்சையும் கொள்ளையடிக்கத் தானே தவிர உங்களுக்கு நல்லது செய்வதற்காக அல்ல!

ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்! இந்தியாவில் ஒரே கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ் கட்சி - லெனின், கம்யூனிஸ்ட் கட்சி - ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி - குருஷேவ், கம்யூனிஸ்ட் கட்சி - புடின், கம்யூனிஸ்ட் கட்சி - நக்சலைட் என்று பல கூறாக பிரிந்தது ஏன்... கொள்கை பிடிக்காமலா அல்லது பதவி கிட்டவில்லையே என்ற ஏக்கமா? அவர்களுக்கே வெளிச்சம்!

பிரிந்தாகி விட்டது. அதன் பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாமா? மாட்டார்கள்! கூட்டணி வைக்கலாமா? கூடாது! ஆனால் பீஹாரில் எல்லாமே ஒன்று சேர்ந்து லாலுவின் மகனுக்கு ஆதரவு கொடுத்து சில பல இடங்களையும் பிடித்து விட்டன. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது தான் சோகம்!

இங்கே தமிழ் நாட்டிலும் நயவஞ்சகமாக மக்களை ஏமாற்றி பெரிதாக உருவெடுத்த கட்சியும் இப்படி தான் செய்கிறது! கடந்த 1967ல் மூதறிஞர் ராஜாஜி காங்கிரஸ் மீதிருந்த கோபத்தில் தி.மு.க தலைமையில் ஒன்பது கட்சிகளை சேர்த்து ஒரு கூட்டணி அமைத்திருக்காவிட்டால் இன்று வரை தி.மு.க. ஆட்சியில் அமர்ந்திருக்கவே முடியாது; காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்து இருக்காது!


latest tamil news


விதி வேலையைக் காட்டும் போது புத்தி வேலை செய்யாது என்று பெரியோர் சொல்வது வழக்கம். தமிழ் நாட்டில் தி.மு.க., ஆட்சியில் அமர வழி அமைத்துக் கொடுத்த மூதறிஞர் ராஜாஜியையே ஆட்சியில் அமர்ந்தவுடன் 'குல்லுக பட்டர்' என்று அழைத்துக் குதுாகலித்தார் கருணாநிதி! கொட்டும் மழையில் கருணாநிதியை வீடு தேடி வந்து 'சாராயக் கடையை திறக்காதீர்கள்' என்று அந்த மூதறிஞர் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து ஒதுக்கித் தள்ளி சாராயக் கடைகளைத் திறந்தார். அதன் பிறகு தேர்தல் கூட்டணியோ, தொகுதி உடன்பாடோ தி.மு.க.வுடன் செய்து கொள்ளலாமோ? உப்பே தின்று பழக்கமில்லை போலிருக்கு காங்கிரசுக்கு!

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து வெட்கம், பிளஸ் மானம் கெட்டு சவாரி செய்கிறது. அண்ணா அறிவாலயத்தில் ஒரு தளத்தில் சி.பி.ஐ விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, மற்றொரு தளத்தில் எந்த காங்கிரஸ் ஆட்சி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதோ, அதே கட்சியோடு கூட்டணி உடன்பாடு செய்து கொண்டிருந்தது தி.மு.க.

இதிலிருந்து வாக்காளர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் அரசியல் கட்சிகளுக்கு பதவியில் அமர வேண்டும்; நாட்டைச் சுரண்ட வேண்டும்; முடிந்தவரை பதவியில் இருக்கும் போது வாரி வாரி குவித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒன்று தான் குறிக்கோள்; சேவையாவது வெங்காயமாவது!

மேற்படி 'உன்னத' குறிக்கோளை அடைய அவர்கள் எந்த லெவலுக்கும் இறங்குவர்; எந்த காரியத்தையும் செய்வர்! காங்கிரஸ் போலா நாம்... உப்பு தின்கிறோமே; சுரணை கூட்டிக் கொள்வோம்! - துர்வாசர்

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
18-நவ-202021:33:51 IST Report Abuse
madhavan rajan 1977ல் இந்திராவை கொலை செய்யும் முயற்சி செய்தது திமுக. காங்கிரசை பலமுறை அவமதித்தது திமுக தலைமை. ஆனாலும் உன்னைவிட்டால் எனக்கு நாதியில்லை என்று திமுகவைப் பிடித்தது தொங்குகிறது ...கேட்ட காங்கிரஸ். இது அந்த கட்சிக்கும் நாட்டுக்கும் சாபக்கேடு.
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
18-நவ-202012:52:33 IST Report Abuse
NoBs சாக்கடைகளில் கடைசீ போக்கிடம் திமுக வெட்கம் மானம் எல்லாம் அடமானம் குடும்பத்தில் சொத்து சேர்ப்பதே குறிக்கோள் தமிழென்றோர் இனம் உண்டு தனியே ஒரு குணம் உண்டு எல்லாவற்றையும் துடைத்து போட்டுவிட்டு இந்த மாதிரி அரசியலுக்கு உடன்போவதுதான் அது சுய மரியாதையாவது ஒண்ணாவது பெரிய வெங்காயம் எவன் ஊத்திக்கொடுக்கறானோ எவன் போட்டு கொடுக்கறானோ அவனுக்கு வோட்டு மத்தவனுக்கு வெட்டு அறுபத்து எழுலே உதய சூரியன் அதுக்கு அப்புறம் நாடே அவிஞ்சு போச்சு தொன்னூத்து ஒம்போது விழுக்காடு படிப்பறிவு ஒரு விழுக்காடு சுய அறிவு செரியாபோச்சுன்னேன்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
18-நவ-202006:15:23 IST Report Abuse
Indhuindian தனக்கு வேணும்ன்னா காலில் விழுவது, பிடிக்கவில்லை என்றால் கண்டபடி ஏசுவது இதில் கருணாநிதியை யாரும் தோற்கடிக்க முடியாது. காமராஜ், கக்கன், ராஜாஜி, இந்திரா காந்தி, பிஜேபி இன்னும் பலப்பல இவர்களை சகட்டுமேனிக்கு வாய்க்கூசும் வார்த்தைகளை சும்மா அள்ளிவிடலையா? ஆனா அப்படியே ஒரு அந்தர் பல்டி போட்டு அவங்ககிட்டே எப்போ தனக்கு காரியம் ஆகணுமோ அப்போ போயி காலில் விழலயா? ஆனா தமிழக மக்களை பாராட்டணும் எவ்வளவு சொன்னாலும் தெரிஞ்சாலும் ஒண்ணுமே தெரியாதமாதிரி இருக்காங்களே அதுதான் தமிழன்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X