சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

சொத்தில் பாக உரிமை கோர கால வரம்பு

Added : நவ 17, 2020
Share
Advertisement
நெடுஞ்சாலையிலிருந்து என் தோப்பிற்கு கிராம சாலை வழியாக அரை கி.மீ., துாரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. தனியார் இடம் வழியாக எளிதில் செல்லலாம். சட்டப்படி தனியார் இடத்தில் பாதைக்கான உரிமை கோர முடியுமா?மாற்றுப்பாதை இல்லாதபட்சத்தில் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், சட்டப்படி நிவாரணம் கிடைக்கும். சில கிரையப் பத்திரங்களில் சொத்துடன் கூடிய பாதை


நெடுஞ்சாலையிலிருந்து என் தோப்பிற்கு கிராம சாலை வழியாக அரை கி.மீ., துாரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. தனியார் இடம் வழியாக எளிதில் செல்லலாம். சட்டப்படி தனியார் இடத்தில் பாதைக்கான உரிமை கோர முடியுமா?

மாற்றுப்பாதை இல்லாதபட்சத்தில் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், சட்டப்படி நிவாரணம் கிடைக்கும். சில கிரையப் பத்திரங்களில் சொத்துடன் கூடிய பாதை பாத்தியதை உரிமை மாற்றம் செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு செய்திருந்தால் சட்டத்தினால் 'பரிந்துரைத்தல்' என்ற கோட்பாட்டின் கீழ் உரிமை கோர முடியும். மாற்றுப்பாதை இருப்பின் உங்கள் சிரமத்தை மட்டுமே காரணமாக கொண்டு தனியார் சொத்தில் பாதை அமைக்க உரிமை கோர முடியாது.


என் பெற்றோர் 30 ஆண்டிற்கு முன் இறந்தனர். எங்கள் பூர்வீக வீட்டில் பாகம் பிரிக்காமல் என் சகோதரியின் மகன் வசிக்கிறார். நான் மும்பையில் வசிக்கிறேன். காலம் கடந்ததால் பாகம் பிரித்து கேட்க முடியாது என்கின்றனர். சட்டத்தின் நிலை?

சொத்தின் கூட்டு சுவாதீனத்தில் இல்லாத நீங்கள் உங்கள் பாகபாத்தியதையை குறிப்பிட்ட காலத்திற்குள் எழுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. பாகத்திற்குரிய சொத்தினை மற்றொருவர் அனுபவிக்கிறார் எனத் தெரிந்தும், 30 ஆண்டுகளாக ஆட்சேபனை செய்யாமல் இருந்துவிட்டீர்கள். அதுவும் சட்டத்தின் மற்றொரு பிரிவினால் 'பாதகமான' உடைமையுரிமையாகிவிட்டது. ஒவ்வொரு சட்டபூர்வ செயல், கோரிக்கைக்கு 'காலவரையறை சட்டப்படி' கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கூட்டு சுவாதீனத்தில் இல்லாமல் பாக உரிமை கோரல் மற்றும் சுவாதீனத்தை தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் தெரிந்தே மற்றொருவரின் வசம் விட்டு வைத்தல் காரணங்களால் உரிமை கோர முடியாது.

வீ.எஸ்.கார்த்தி, வழக்கறிஞர்,
0452-423 0666,
மாலை 5:00- 7:00 வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X