அறிவியல் ஆயிரம்
விண்வெளியில் சோலார்
சோலார் மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. தற்போது இது பல இடங்களிலும் பரவலாக்கப் படுகிறது. பூமிக்கு மேலே மேகங்கள் இல்லை. பகல் இரவு இல்லை. சூரிய ஒளி பிரகாசமாக கிடைக்கும். இதனால் விண்வெளியில் சூரிய ஒளி மின்சார நிலையத்தை அமைத்து, மின்சாரம் தயாரிப்பு சாத்தியமா என்பது பற்றி ஆய்வு செய்ய பிரிட்டன் திட்டத்தை தொடங்கியுள்ளது. சோலார் மின்சாரத்தை, லேசர் பீம் மூலம் மின்சாரத்தை பூமிக்கு கொண்டு வருவதுதான் இத்திட்டம். இது சாத்தியம் எனில் உலகம் முழுவதும் தேவைப்படும் இடங்களுக்கு மின்சாரத்தை அனுப்ப முடியும்.
தகவல் சுரங்கம்
நீண்டகால பெண் முதல்வர்
இந்தியாவில் இதுவரை 16 பெண்கள் முதல்வராக பதவி வகித்துள்ளனர். இதில் தமிழகம், உத்தரபிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்களில் தலா இருவர், ஒடிசா, கோவா, அசாம், பஞ்சாப், பீஹார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பதவி வகித்துள்ளனர். இதில் டில்லி முதல்வராக இருந்து மறைந்த ஷீலா தீட்சித் நீண்டகாலம் (5502 நாட்கள்) பதவி வகித்த பெண் முதல்வர். 2வது இடத்தில் தமிழகத்தின் மறைந்த ஜெயலலிதா (5238 நாட்கள் ) உள்ளார். ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே (3667 நாட்கள்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE