சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'கே பிளான்' ஞாபகம் இருக்கிறதா?

Added : நவ 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
'கே பிளான்' ஞாபகம் இருக்கிறதா?அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சிக்கு எதிராக, வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டியது, மிகவும் அவசியம்.மத்தியில் ஆளுங்கட்சியாக, பா.ஜ., பெரும்பான்மையுடன் அமர்ந்து உள்ளது. பா.ஜ.,க்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சியாக திகழ வேண்டிய காங்கிரஸ், நாளுக்கு நாள் சுருங்கி, பலவீனம் அடைந்து வருகிறது. இது,

'கே பிளான்' ஞாபகம் இருக்கிறதா?

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சிக்கு எதிராக, வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டியது, மிகவும் அவசியம்.மத்தியில் ஆளுங்கட்சியாக, பா.ஜ., பெரும்பான்மையுடன் அமர்ந்து உள்ளது. பா.ஜ.,க்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சியாக திகழ வேண்டிய காங்கிரஸ், நாளுக்கு நாள் சுருங்கி, பலவீனம் அடைந்து வருகிறது. இது, அக்கட்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல.சமீபத்தில் நடந்து முடிந்த, பீஹார் சட்டசபை தேர்தலில், 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும், 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது; மேலும், ஆட்சி கட்டிலில் அமர வேண்டிய, ஆர்.ஜே.டி.,யின் வெற்றியையும் தடுத்து விட்டது.மாநில அரசியலிலும், காங்கிரஸ் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதற்கு காரணம், அக்கட்சியின் தலைமை தான் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. 50 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியை வளர்க்க தவறியதே, இன்றைய தடுமாற்றத்திற்கு காரணமாக முன்னிற்கிறது.கடந்த, 1963ல், எதிர்க்கட்சி எதுவும் வலுவாக இல்லாத சூழலில், காங்கிரசில், காந்தி வழியில் வந்த அரசியல்வாதிகள் எண்ணிக்கை குறைய துவங்கியது. அரசியலை, வணிகமாக பார்ப்போர் அதிகரித்தனர்.அப்போது, உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பதவிக்காக, கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.'பதவியில் இருக்கும் வரை, நம்மிடம் இருந்து, சோசலிசம் விலகி போகும்' என, மஹாத்மா காந்தி கூறியது, உண்மையாகி போனது. காந்தியின் உண்மை தொண்டரான காமராஜர், பதவி வெறி பிடித்த நபர்களிடம் இருந்து, நாட்டையும், காங்கிரசையும் காப்பாற்ற சிந்தித்தார்.உடனடியாக, நேருவை சந்தித்து, 'கே பிளான்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி, காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள், அரசு பதவியில் இருந்து வெளியேறி, கட்சிக்காக பணி செய்ய வேண்டும் என்றார். 'கே பிளான்' திட்டத்தை ஏற்று, காங்கிரஸ் தலைவர்கள், 42 பேர், தங்களது, அரசு பதவியை ராஜினாமா செய்தனர்.முதல்வர்களாக இருந்த காமராஜர், பிஜு பட்நாயக், பஷி குலாம் முகமது, சி.பி.குப்தா பினோதானந்தா, மண்ட்லாய் போன்றோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.மத்திய அமைச்சர்களாக இருந்த லால்பகதுார் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பட்டீல், ஜெகஜீவன்ராம் என பலரும், கட்சியை வளர்ப்பதற்காக, தங்களது அரசு பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது வரலாறு.இன்று, காங்கிரசை காப்பாற்ற, அக்கட்சியில் இருக்கும் சாதாரண தலைவர் கூட, தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வர மாட்டார் என்பது தான் உண்மையாகும். நேரு முதல், ராகுல் வரை, காங்கிரசில் தொடரும் குடும்ப அரசியல், அக்கட்சியை கரைத்துவிட்டது. இப்போதாவது காங்கிரசில், காமராஜரின், 'கே பிளான்' முறையை அமல்படுத்த வேண்டும்.முதலில் சோனியா, தன்னிடம் உள்ள கட்சி தலைவர் பதவியை, வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியில் பதவி சுகம் அனுபவித்து வருவோரை ஒரம்கட்ட வேண்டும். கட்சிக்கு புத்துயிர் பாய்ச்ச வேண்டும்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஒவ்வொரு மாநிலமாக சென்று, கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும். நாடு முழுதும், காங்கிரஸ் வளர்ந்தால் தான், பா.ஜ.,வை எதிர்க்க முடியும்.
காங்கிரஸ், இனியும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை; எனவே, துணிந்து களமிறங்க வேண்டும்!

உஷார்ஸ்டாலின்உஷார்!

டி.ஜெய்சிங், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடந்து முடிந்த, பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து, தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரசை கழற்றிவிட வேண்டும் என்ற பேச்சு, அக்கட்சிக்குள் எழுந்துள்ளது.தமிழக சட்டசபைத் தேர்தலில், கூட்டணி அமைக்காமல், தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட்டு, 'மெஜாரிட்டி'யுடன் வெல்லலாம் என்ற கருத்து, நேர் எதிராக அமையவும் வாய்ப்பு உள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில், 5,000க்கும் குறைவான ஓட்டுக்கள் வித்தியாசத்தில், பல தொகுதிகளில், தி.மு.க., தோல்வியை தழுவியதை, மறக்கக் கூடாது.வரும் சட்டசபைத் தேர்தலில், காங்கிரசாரின் ஓட்டு, தி.மு.க.,க்கு கிடைக்காமல் போகும் பட்சத்தில், சில, 100 ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர்கள் சிலர், தங்கள் வெற்றி வாய்ப்பை இழக்க
நேரிடும்.'சிறு துளி பெரு வெள்ளம்' என்பது போல், காங்கிரசின் ஓட்டு சதவீதம், நிச்சயம், தி.மு.க.,க்கு பயனாக அமையும். ஆகவே கூட்டணி விஷயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். காங்கிரசை கைவிட்டு, 'கோட்டை'யை பிடிக்க நினைத்தால், அது கனவாகி விடும்!

'யூ டூ வைகோ?' 

பி.ஸ்ரீபாதராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முதல்வர் இ.பி.எஸ்., தாய் மறைவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்தியில் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். இது, 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ விமர்சித்துள்ளார்.அது ஒரு இரங்கல் கடிதம்; அதில், அவர் என்ன எழுதியிருக்கப் போகிறார்... தன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, ஆறுதல் வார்த்தை எழுதியிருப்பார். இதை, சாதாரண குடிமகன் கூட புரிந்து கொண்டிருப்பானே!முதல்வருக்கு, ஹிந்தி தெரியவில்லையெனில், அந்த மொழி தெரிந்த அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொள்ளப் போகிறார். அதென்ன காதல் கடிதமா... ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து, ரசித்து அக மகிழ்வதற்கு?அடுத்து, அவர், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு கூறிய யோசனை தான், ஏற்கவே முடியாதது... அதாவது, 'எனக்கு, ஹிந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை, ஆங்கிலத்தில்எழுதி அனுப்புங்கள்' எனக் கூறி, அந்தக் கடிதத்தை, அமித் ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமாம்.
எவ்வளவு அநாகரிகமான யோசனை. இதெல்லாம் கேட்டுப் பெற வேண்டிய விஷயமா?தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியா அது; கேட்டுப் பெறுவதற்கு!பழுத்த அரசியல்வாதியான அவருக்கு, ஏன் இவ்வாறு சிந்திக்க தோன்றுகிறது? இரங்கல் கடிதத்திலும், மொழி உணர்வை வெளிப்படுத்த வேண்டுமா?

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
18-நவ-202019:37:29 IST Report Abuse
karutthu நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது .....வைகோ அதில் கவனம் செலுத்தினால் போதும் ...ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் முதல்வரிடம் இருப்பார்கள் ...அவர்கள் மூலம் அதை தெரிந்திருப்பார் .....
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
18-நவ-202014:01:32 IST Report Abuse
mathimandhiri கழுகுக்கு மூக்குல வேர்க்குமாம். துப்பறியும் சிங்கம் துப்பறிந்து விட்டார். இப்படி உருப்படாத அரசியல் பண்ணுவதே இவங்க பொழப்பு. திருந்த வாய்ப்பும் இல்லை, வழியும் இல்லை. இருந்து என்ன பயனோ
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-நவ-202006:26:59 IST Report Abuse
D.Ambujavalli இரங்கல் கடிதத்தைக்கூட உதவியாளர் மூலம் ஆங்கிலத்தில் அனுப்பி இருக்கலாம் போல ஷா, ஹிந்தியில் சில உணர்ச்சிபூர்வமான சொற்களைத் தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியிருக்கலாம் இணையான ஆங்கிலச் சொற்களில் அழுத்தம் தர இயலாது என தோன்றி இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X